நண்பன் காதலியின் தோழியை ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்ததால், ஏழு மாசம் கர்ப்பிணியாக இருப்பதால் வாலிபர் போலீசுக்கு பயந்து தலைமறைவாகி விட்டார்.  

வேலூர் மாவட்டம் காட்பாடி பிரம்மபுரத்தை சேர்ந்த பிச்சமுத்து மகன் சந்தோஷ். இவர் மாட்டு வண்டி ஒட்டி சம்பாதிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் ஜாப்ராபேட்டை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார். காதலியை பார்க்க செல்லும் நண்பருடன் சந்தோசும் சென்று வந்துள்ளார்.

அதேபோல அவரது நண்பரின் காதலி தன்னுடைய 20 வயது தோழியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவர்கள் இருவரும் ஒருபக்கம் காதலிக்க, தோழியம், நண்பரும் ஒருபக்கம் தங்களது காதலை வளர்த்து வந்தனர். 

இந்நிலையில் ஒருநாள் சந்தோஷ் இளம்பெண்ணுடன் தனிமையில் பேசிக்கொண்டிருக்கும் போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் வின்றுள்ளார். இதனால் இளம்பெண் 7 மாத கர்ப்பிணியானார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை கேட்டதற்கு  மறுப்பு தெரிவித்த வாலிபர் தலைமறைவாகி விட்டார். இதுபற்றி காட்பாடி போலீசில் இளம்பெண் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மா வழக்குபதிவு செய்து தலைமறைவான சந்தோசை வலைவீசித் தேடி வருகின்றனர்.