ஆரணி அருகே நண்பனின் மனைவியை மாறி மாறி பலாத்காரம் செய்து ஏன் என்பது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆரணி அருகே நண்பனின் மனைவியை மாறி மாறி பலாத்காரம் செய்து ஏன் என்பது தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 இளைஞர்கள் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ். யூ.வனம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் விவசாயி. இவரது மனைவி ரேவதி (26). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனியாக வசிக்கின்றனர். ரேவதி ஆரணியில் உள்ள வாட்டர் கம்பெனியில் வேலைக்கு சென்று வரும் போது இலுப்பகுணம் கிராமத்தை சேர்ந்த டிரைவர் மணிகண்டனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ரேவதியுடன் பழக்கத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளார். இதையடுத்து ரேவதி குழந்தைகளுடன் மணிகண்டனுடன் சேர்ந்து சில மாதங்களாக ஆரணியில் தனி வீடு வாடகைக்கு எடுத்து கணவன், மனைவியாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், மணிகண்டனின் நண்பரான இலுப்பகுணத்தை சேர்ந்த டிரைவர் கோகுல்ராஜ் (22) பெங்களூரில் காதலித்து வந்த பெண்ணை சில மாதங்களுக்கு முன் ரகசியமாக திருமணம் செய்து, மணிகண்டன் வீட்டின் அருகில் உள்ள வீட்டை வாடகைக்கு எடுத்து வசிக்கிறார். இந்நிலையில், மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு வேலை விஷயமாக செஞ்சிவரை சென்றுள்ளார்.

அப்போது இரவு 8.30 மணியளவில் ரேவதி வீட்டுக்கு கோகுல்ராஜ், நண்பர் ஜெயசூர்யாவுடன் (22) சென்றுள்ளார். கணவரின் நண்பர்கள் என் பதால் அவர்களை உள்ளே அனுமதித்துள்ளார். திடீரென இருவரும் வீட்டை உள்பக்கமாக பூட்டிவிட்டு ரேவதியின் குழந்தைகளை பக்கத்து அறையில் தள்ளிசத்தம் போடாமல் இருக்க வேண்டும், இல்லை என்றால் உங்களை கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பயந்து போன குழந்தைகள் அமைதியாக இருந்துள்ளது.

பின்னர் ரேவதியை இருவரும் சேர்ந்து படுக்கை அறைக்கு தூக்கி சென்று வாய், கை கால்களைக் கட்டிவிட்டு இருவரும் மாறி மாறி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதை வீடியோ எடுத்துள்ளனர். இதுகுறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர். வெளியே சென்று விட்டு வீடு திரும்பி கணவரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். 

இதுகுறித்து இளம்பெண் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து கோகுல்ராஜ், ஜெய்சூர்யா 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. எனது காதல் மனைவியை இளம்பெண் அடிக்கடி திட்டி வந்தார். இதனால் அவளை பழிவாங்க நண்பனின் மனைவி என்று கூடபார்க்காமல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து, கோகுல்ராஜ், ஜெய்சூர்யா இருவரையும் ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் ஆரணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.