மனைவியின் அழகை வர்ணித்த நண்பணை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 நாட்களுக்குப் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஊட்டி அருகில் உள்ள இடுதட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது27). இவர் தனியார் பள்ளியில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம் தேதி தனது நண்பரான பாரதி என்பவருடன் பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றனர். சாமி தரிசனம் செய்த பிறகு இருவரும் அடிவாரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினர். 

பின்னர் இருவரும் மது அருந்திக்கொண்டே ஜாலியாக பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பாரதி, உன் மனைவி மிகவும் அழகானவர். அவரிடம் தகராறு செய்யாதே என்று அறிவுரை வழங்கினார். மேலும் உன்னைப்போல் எனக்கு மனைவி கிடைத்திருந்தால் அவரை கண்கலங்காமல் நன்றாக வைத்து பார்த்துக் கொள்வேன் கூறியுள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் என் மனைவியை பற்றி எப்படி என்னிடமே வர்ணித்து பேசலாம் என்று ராமச்சந்திரனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பாரதி அவர்களது குடும்பத்தாருக்கு போன் செய்து ராமச்சந்திரன் மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இதனையடுத்து அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். ராமச்சந்திரனின் சகோதரர் தனது அண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாசில்தார் முன்னிலையில் உடல் தோண்டி எடுத்து கோவை அரசு மருத்துவர்களால் மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. பின்னர் அவரது நண்பரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்தை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பாரதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.