திருச்சியை சேர்ந்த பெண் மருத்துவர் ராஜேஸ்வரி. இவர்  கணவனை இழந்து குழந்தையுடன் வசித்து வருகிறார்.  மறுமணம் செய்து கொள்வதற்காக  திருமண தகவல் மைய இணையதளத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார்.

அதே நேரத்தில் ராஜேஸ்வரி ஒரு இணையதளத்தில் விது என்ற நபரின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததைப் பார்த்துள்ளார்.  அதில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தான் கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண் மருத்துவர்களுக்கு வாழ்வு கொடுக்க தயார் என அந்த இணையத்தில் விது பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து விதுவை தொடர்பு கொண்டு பேசிய ராஜேஸ்வரி, தன்னைப் பற்றிய விவரங்களையும், விது குறித்த விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டார். தொடர்ந்து அடிக்கடி பேசிய அவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் விது மீது சந்தேகம் வரவே டாக்டர் ராஜேஸ்வரி திருவண்ணாமலையில்  உள்ள விதுவின்  வீட்டிற்கு சென்றபோது அவனைப் பற்றி தகவல்கள் தெரியவந்தது.

அந்த வீட்டில் விழவுக்கு  வந்திருந்த தபால் ஒன்றை பிரித்துப் பார்க்கவே அதில் சென்னையை சேர்ந்த பெண் மருத்துவரின் கடிதம் இருந்தது. அது யாரென்று கேட்க சகோதரி என்று கூறி அவன் சமாளித்துள்ளார் விது. 

இருப்பினும் அனுப்புனர் விவரத்திலிருந்து செல்போன் எண்ணுக்கு அந்த பெண் மருத்துவரை தொடர்பு கொண்டு  விசாரித்த பொழுது அப்போது எதிர்முனையில் பேசிய பெண் தன்னை மருத்துவர் என்று கூறிக்கொண்டு பேச தொடங்கியுள்ளார். அமெரிக்க மருத்துவரை மணந்துகொள்ள போவதாகவும் கூறவே ராஜேஸ்வரி  அதிர்ச்சி அடைந்தார்.

அதன்பின்தான் விது பல்வேறு திருமண தகவல் மைய இணைய தளங்களில் வெவ்வேறு பெயர்களில் பதிவு செய்து வைத்துக் கொண்டு பல பெண் டாக்டர்களை ஏமாற்றி பழகி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தெரியாமல் 18 லட்சம் வரை அவனிடம் கொடுத்து ஏமாந்த அந்த ராஜேஸ்வரி  லால்குடி மகளிர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

விசாரணையில் விது திருவண்ணாமலை மாவட்டம் பாரதி நகரைச் சேர்ந்த சக்கரவர்த்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது. கட்டிடப் பொறியாளர் ஆக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து  உடனடியாக விது மற்றும் அவரது ஓட்டுநர் ஆகிய இருவரும்  கைது செய்யப்பட்டனர்.

விது  விஜயகுமார், விது, சரவணன் என பல பெயர்களில் அவர்  திருமணத் தகவல் இணையதளங்களில் பதிவிட்டு ஏமாற்றி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.