புருஷோத்தமனிடம் பிரின்ஸ் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு திண்பண்டம் வாங்க கடைக்கு சென்றுள்ளான். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றில் பார்த்தபோது பிரின்ஸ் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.
அம்பத்தூர் பகுதியில் கிணற்றில் 4 வயது சிறுவன் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அம்பத்தூர் கச்சனாகுப்பத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவரது மனைவி நீலாம்பரி (32). இவர்களுக்கு, பிரின்ஸ் என்ற 4 வயது குழந்தை இருந்தது. தற்போது, நீலாம்பரி நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இவர்களின் சொந்த மாநிலம் பீகார் மாநிலமாகும். இந்நிலையில், நீலாம்பரிக்கு பிரசவ வலி ஏற்பட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பார்க்க புருஷோத்தமன் தன் மகன் பிரின்சை உடன் அழைத்து சென்றார். பின்னர் அவர் நேற்று வீடு திரும்பினார்.
இதையும் படிங்க;- மதுராந்தகம் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து.. 6 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு.!

சம்பவத்தன்று புருஷோத்தமனிடம் பிரின்ஸ் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு திண்பண்டம் வாங்க கடைக்கு சென்றுள்ளான். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர், அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றில் பார்த்தபோது பிரின்ஸ் தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த புருஷோத்தமன், உடனடியாக , அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பிரின்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிணற்றின் சுவரைத் தாண்டி குழந்தையால் கிணற்றுக்குள் தவறி விழுந்திருக்க வாய்ப்பு இல்லை. எனவே குழந்தையை யாராவது கிணற்றுக்குள் தள்ளிவிட்டு கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க;- பிரபல ஹோட்டல் சாப்பாட்டில் பேண்டேஜ்.. அலட்சியம் காட்டிய ஊழியர்கள்.. உரிமையாளர் என்ன பதில் சொன்னார் தெரியுமா?
