ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர் வெட்டி படுகொலை; திருச்சியில் பரபரப்பு
ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த முக்கிய நபர்களில் ஒருவரான பிரபாகரன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் சகோதரரும், தொழிலதிபருமான கே.என்.ராமஜெயம் கடந்த 2012ம் ஆண்டு மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தற்போது வரை ஒருவர் கூட கைது செய்யப்படாத நிலையில் தற்போதும் வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியில் தொழிற்சங்க நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்தவர் பிரபு என்கிற பிரபாகரன். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் கடத்தல் வாகனங்களை வாங்கி அடையாளம் தெரியாமல் மாற்றி அதனை வேறு நபர்களிடம் விற்பனை செய்வதிலும் பிரபு கைதேர்ந்தவர் என கூறப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மேலும் பிரபு திருச்சி அரசு மருத்துவமனை அருகே தனியார் ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வந்தார். பிரபுவிடம் கடந்த 9ம் தேதி ராமஜெயம் கொலை தொடர்பாக சிறப்பு புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ராமஜெயகம் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெர்ஷா கார் யாரிடம் இருந்து யாருக்கு விற்கப்பட்டது என்பது குறித்து பிரபுவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஓடிப்போன மகன்... தாயை ஆடையின்றி இழுத்துச் சென்று மின்கம்பத்தில் கட்டி வைத்த கொடுமை!
மேலும் இது தொடர்பாக பிரபுவிடம் நாளை மீண்டும் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 9 மணியளவில் தனது அலுவலகத்தில் இருந்த பிரபுவை திடீரென வந்த 3 நபர்கள் அலவலகத்திற்குள்ளேயே சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் பிரபு ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தார். ராமஜெயம் கொலை வழக்கில் விசாரிக்கப்பட்டு வந்த நபர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.