உடற்பயிற்சி ஆசிரியர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலத்தில் உள்ள வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்று வந்தவர் பாலச்சந்திரன். 23 வயதே ஆன இவர் அதே பள்ளியை சேர்ந்த மாணவியை காதலில் வீழ்த்தியுள்ளார். பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர். தனது உறவினர் வீட்டில் தங்கிப்படித்து வந்துள்ளார். இந்த மாணவி மீது பாலச்சந்திரன் காதல் கொண்டுள்ளார். ஒரு வழியாக தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். ஆசை வார்த்தை கூறி அந்த மாணவியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். 
 
இந்நிலையில் அந்த மாணவி தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு தனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து கல்லூரியில் சேர்ந்து விட்டார். ஆனாலும் மாணவி மீது ஆசை அடங்காத ஆசிரியர் பாலசந்திரன் மாணவியின் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று மாணவியை சந்தித்துள்ளார். அங்கு மாணவியின் குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவியுடன் தனிமையில் இருந்த ஆசிரியர் பாலச்சந்திரன் தனது காம லீலையை அரங்கேற்றி உள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் பாலச்சந்திரன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.