சென்னையில் சாலையில் நடந்து சென்றவரிடம் செல்போனை பறித்துச் சென்ற 2 பேரை, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் கைது செய்துள்ளனர். 

வேலூர் மாவட்டம் திருவலத்தைச் சேர்ந்தவர் திலக். சென்னை புரசைவாக்கத்தில் வசிக்கிறார். நேற்று மாலை திலக், புரசைவாக்கம் பிரதான சாலையில், செல்போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த 3 பேர், திலக்கின் செல்போனை பறித்து சென்றுள்ளனர். 

புகாரின்படி கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பைக்கில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் சூளையை சேர்ந்த நரேந்திரன், புளியந்தோப்பைச் சேர்ந்த சசிகுமார் என தெரிந்தது.

 

இதைதொடர்ந்து போலீசார், 2 பேரையும், இன்று காலை சுற்றி வளைத்து கைது செய்தனர். தலைமறைவாக உள்ள அவர்களது கூட்டாளியை வலைவீசி தேடி வருகின்றனர்.