மீனவப்பெண் கதற கதற கூட்டு பாலியல் பலாத்காரம்.. வெறி தீராததால் அந்த இடத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரம்.!
தனியார் இறால் பண்ணை அருகே மீனவ பெண் சந்திராவை அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுப்பாலியல் பலாதத்காரம் செய்து படுகொலை செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் அருகே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து மீனவப்பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த சந்திரா (45). இவர் வழக்கம்போல் கடல்பாசி சேகரிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது, தனியார் இறால் பண்ணை அருகே மீனவ பெண் சந்திராவை அடர்ந்த காட்டுப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ளனர். இதனையடுத்து, அடையாளம் தெரியாமல் இருக்க முகம் மற்றும் உடலை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். அதில் சந்திராவின் உடல் நிர்வாணமாக அரைகுறையாக எரிந்து கிடந்துள்ளது.
இந்நிலையில், கடல் பாசி சேகரிக்க சென்று மாலை வீடு திரும்ப வேண்டிய சந்திரா வராததால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் மீனவ கிராம மக்கள் கடல்பகுதியில் தேடியுள்ளனர். பின்னர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவலர் உதவியுடன் அடர்ந்த காட்டுப்பகுதியில் தேடிக்கொண்டிருந்த போது அவருடன் வேலை பார்க்கும் பெண்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது கடந்த இரண்டு நாளுக்கு முன்பு இறால் பண்ணையில் வேலை பார்க்கும் வட மாநிலத்திலத்தவர்கள் சந்திராவை கேலி, கிண்டல் செய்ததாக கூறியுள்ளனர்.
இதையடுத்து இறால் பண்ணை அமைந்துள்ள பகுதியில் தீவிரமாக கிராம மக்கள் மற்றும் போலீசார் தேடியபோது கடல் பாசி சேகரிக்க கொண்டுசென்ற சாப்பாட்டு பாத்திரம் உள்ளிட்டவற்றை முதலில் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் உடலில் துணி இல்லாமல் அரைகுறையாக எரிந்த நிலையில் சந்திரா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியாக சந்தேகப்படும் 6 வடமாநிலத்தவர்களை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. மீனவப் பெண்ணை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் வடமாநிலத்தை சேர்ந்த 6 இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இறால் பண்ணை உரிமையாளர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து பெண்ணின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திய சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.