கணவனின் அன்பு கிடைக்காததால், இரண்டாவது மனைவியை, முதல் மனைவி  கொடூரமாக கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.  

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் ரஷீத் செங்குன்றத்தில் உள்ள இறைச்சிக் கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் வங்க தேசத்தைச் சேர்ந்த சுராகாத்  என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சுராகாத்க்கு அடிக்கடி உடல் நலம் சரியில்லாமல் போனது. இதனால் குழந்தைகளையும் கணவரையும் அவரால் சரிவர கவனிக்க முடியவில்லை. 

இந்த நிலையில், சுராகாத் சொந்தக்கார பெண்ணான வங்க தேசத்தைச் சேர்ந்த ஜெரினாவுக்கு மாப்பிள்ளை தேடும் படலம் நடந்தது. வங்கதேசத்தில் அவருக்கு மாப்பிள்ளை கிடைக்காததால், தனது கணவரான ஜெரினாவை ரஷீத்துக்கு இரண்டாவதாக திருமணம் செய்ய சுராகாத் முடிவு செய்தார். குடும்பத்தினரின் விருப்பத்தின்பேரில்  தனது கணவன் ரஷீத்துக்கும் ஜெரினா பேகத்துக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. தற்போது ஜெரினாவுக்கு  கர்ப்பமாக உள்ளார். 

இந்நிலையில், ரஷீத்  ஜெரினா பேகத்தை திருமணம் செய்தபிறகு  முழுமையாக மாறிவிட்டார். இதனால் முதல் மனைவியான சுராகாத்தூணிடம் கணவர் அன்பாக இல்லாததால். ஆரம்பத்தில் இவர்கள் கூட்டுக்குடும்பமாக இருந்தனர். இதனைத் தொடர்ந்து தினம் தினம் அதன்பிறகு குடும்பத்தில் தகராறு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக சுராகாத்க்கும் ஜெரினாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ரஷீத்திடமும் சுராகாத் சண்டைபோட்டார். இதனால் குடும்பத்தில் நிம்மதியில்லை. 

இந்த நிலையில், சம்பவத்தன்று ஜெரினாவுடன் சுராகாத் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த சுராகாத், கத்தியால் ஜெரினா பேகத்தைக் குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். சுராகாத் மீது புழல் போலீஸார், கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெரினா இறந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், கணவன் மனைவியான முகமது ரஷீத்தும் சுராகாத் சந்தோஷமாகத்தான் வாழ்ந்துவந்தனர். அப்போதுதான் சுராகாத் தங்கை முறையான ஜெரினாவுக்கு மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அன்றைய சூழலில் சுராகாத் சம்மதத்துடன்தான் ஜெரினாவுக்கும், ரஷீத்துக்கும் திருமணம் நடந்தது. குழந்தை பிறந்த பிறகுதான் சுராகாத் மனமாறிய அவர், ஜெரினா கர்ப்பமாக உள்ளார். இதனால் சுராகாத்தூணுக்கும் ஜெரினாக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஜெரினா உயிரோடு இருந்தால்  ரஷீத், தன்னிடம் அன்பாக இருக்கமாட்டார் என  இணைத்த சுராகாத் அவரை கொலை செய்ய பிளான் போட்டு, கத்தியால் குத்திய சுராகாத், தப்பிச் செல்ல முயன்றார்.  

ஜெரினா கர்ப்பமாக இருந்ததால் அதிகளவில் ரத்தம் வெளியேறி உயிருக்குப் போராடினார். மருத்துவமனையில் குழந்தையையும் ஜெரினாவை காப்பாற்ற போராடினர். ஆனால் அவர் இறந்துவிட்டார். இந்தத் தகவல் சிறையில் இருக்கும் சுராகாத்க்கு தெரியப்படுத்தியபோது அவர் கண்கலங்கினார். ஆத்திரத்தில் தவறு செய்துவிட்டேன் என்று கதறி அழுதார் என்றனர்.

சுராகாத் குழந்தைகளும் ஜெரினாவின் குழந்தையும் ஆதரவற்ற நிலையில் உள்ளனர். 2 வது மனைவியை முதல் மனைவியே கொலை செய்ததால் மனைவியும், வயிற்றில் இருந்த குழந்தையை இழந்த சோகத்தில் உள்ளாராம் ரஷீத்.