மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தனிமை படுத்தப்பட்ட திருமணம் ஆகாத பெண் போலீஸ், தபால் துறையில் பணியாற்றும் ஒருவருடன் நெருக்கமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் காவலருக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதை அடுத்து அந்த காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

காவலர்களின் குடும்பத்தினரும் தனிமைப் படுத்தப்பட்டனர். அப்படி தனிமைப்படுத்தப்படும் போது அந்த காவல் நிலைத்தில் பணிபுரிந்து வந்த பெண் போலீஸ் ஒருவர், தனது கணவருக்கும் கொரோனா இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், அவரையும் தன்னுடன் சேர்த்து தனிமைப்படுத்த வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து தபால் துறையில் வேலை பார்த்து வந்த அவரையும் அழைத்து வந்து தடுப்பு முகாமில் இருந்த பெண் போலீசுடன் சேர்த்து தனிமைப்படுத்தினர். இதற்கிடையில் பஜாஜ் நகரில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்த பெண் ஒருவர் தனது கணவருக்கு கொரோனா உள்ளதாகவும், ஆனால் அவர் பெண் போலீஸ் ஒருவருடன் கொரோனா தடுப்பு முகாமில் இருப்பதாகவும், அவரை மீட்டுத் தரவேண்டும் என்றும் புகார் கொடுத்தார்.

விசாரணையில் கொரோனா தடுப்பு முகாமில் உள்ள பெண் காவலருக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெரிய வந்தது. அவருடன் கொரோனா முகாமில் உள்ள நபருக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதையும், இவர்கள் இருவரும் யாருக்கும் தெரியாமல் காதலித்து குடும்பம் நடத்தி வந்ததையும் கண்டுபிடித்தனர். கடந்த ஆண்டு ஒரு அரசு நிகழ்ச்சியின்போது இந்த பெண் போலீஸும், தபால் துறையில் வேலை பார்த்து வந்த அந்த நபரும் சந்தித்துள்ளதாகவும் அதன் பின்னர் இருவரும் யாருக்கும் தெரியாமல் குடும்பம் நடத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்தது. பின்னர் இருவரும் வெவ்வேறு கொரோனா தடுப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.

 

கொரோனாவை காரணம் காட்டி பெண் போலீஸார் லீலையில் ஈடுபட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.