வேறு சாதி பையனை காதலித்த மகள்.. மறுத்த தந்தை எடுத்த விபரீத முடிவு - காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்

இளம்பெண் ஒருவரை சொந்த தந்தையே கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

father who strangled his daughter at love issue

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாமிலி கிராமத்தில் அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

father who strangled his daughter at love issue

மேலும் செய்திகளுக்கு..“60 சதவீதம் எஸ்கேப்.. ஸ்லீப்பர் செல்ஸ் முன்னாள் அமைச்சர்கள்” அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி - காரணம் இவரா ?

பிறகு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி விசாரணை செய்தனர். அப்போது போலீசார் விசாரணையில் உயிரிழந்தது 18 வயதான இளம்பெண் என்றும், உயிரிழந்த இளம்பெண்ணின் தந்தை பிரமோத்குமார் என்றும் தெரிய வந்தது. பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை தீ வைத்து எரித்ததை பிரமோத் ஒப்புக்கொண்டார். பிரமோத்குமாரின் 18 வயதான மகள் அதே ஊரைச் சேர்ந்த அஜய் காஷ்யப் என்ற இளைஞரை காதலித்துள்ளார். குடும்பத்தினர் அந்த இளம்பெண்ணை கண்டித்துள்ளனர். ஆனாலும், காதலர்கள் இருவரும் வெளியில் சந்தித்து அடிக்கடி பேசியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..விடியா திமுக அரசே.! சாட்டையை சுழற்றிய எடப்பாடி பழனிசாமி - அதிமுகவினருக்கு கட்டளை போட்ட இபிஎஸ்.!

father who strangled his daughter at love issue

தனது மகள் வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரை காதலிப்பதால் ஆத்திரமடைந்த பிரமோத்குமார் தனது மகளை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதையடுத்து, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு தனது மகளை நிலத்தில் வேலை இருப்பதாக கூறி அழைத்துச் சென்று, மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், மகளின் உடலை அதே இடத்தில் தீ வைத்து எரித்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..“பாகுபலியை மிஞ்சிய பிரமாண்டம்”.. ஜெயலலிதா வளர்ப்பு மகன் திருமணத்தை மிஞ்சிய திமுக அமைச்சர் .! வெறுப்பில் மக்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios