ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியை அவரது தந்தை 7 லட்ச ரூபாய் பணத்திற்காக விற்ற நிலையில்,  அந்த சிறுமி 4 மாத கர்ப்பிணியாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் 13 வயது  சிறுமியின் குடும்பத்தாரை அனுகிய ராம்  என்ற இடைத்தரகர் உங்கள் மகளுக்கு ஒரு பெரிய இடத்தில் வரன் பார்த்துள்ளேன் எனக் கூறியதுடன் அந்தப் பெண்ணை தன்னுடன் அனுப்பி வைத்தாள் மாப்பிள்ளை வீட்டாரிடம் அறிமுகம் செய்துவிட்டு வருவேன் என கூறியுள்ளார்.

 

இதனை நம்பிய குடும்பத்தினர் அந்த சிறுமியையும் அவரது தந்தையையும் கடந்த ஜூன் 22ஆம் தேதி இடைத்தரகர் உடன் அனுப்பி வைத்தனர், ஆனால்  திடீரென மகளை யாரோ கடத்தி விட்டதாக சிறுமியின் தந்தை கூறினார்,  இதனையடுத்து பதற்றமடைந்த அவரின் தாய் உள்ளிட்ட உறவினர்கள் கடந்த ஜூன் 30-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர் . இதையடுத்து போலீசார் சிறுமி கடத்தப்பட்டது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  நீண்ட விசாரணைக்குப் பிறகு சிறுமியின் தந்தை மற்றும் இடைத்தரகர் ராம் மாலி,  ஷர்மினா,  ராம்தாஸ்பா ஆகியோரை கைது செய்தனர்.  

இந்நிலையில் சிறுமியை கடந்த 12ஆம் தேதி ஐதராபாத்தில் இருந்து பார்மர் போலீசார் மீட்டனர். சிறுமியுடன் இருந்த இருவரையும்  கைது  செய்தனர்.  தற்போது அந்த சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சிறுமியை பார்மர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.  சிறுமிக்கு நடந்தவை குறித்து போலீசார் அவளின் தந்தை மற்றும் இடைத்தரகரிடம் விசாரித்ததில் கடந்த ஜூன் 22ஆம் தேதி சிறுமியுடன் சென்ற அவரது தந்தை இடைத்தரகர் உதவியுடன் சுமார் ஏழு லட்ச ரூபாய்க்கு சிறுமியை இரண்டு இளைஞர்களுக்கு விற்றது தெரிய வந்தது. 

ஆரம்பத்தில் திருமணம் செய்து  கொள்வதாக  தெரிவித்தவர்கள்,  பிறகு ஏழு லட்ச ரூபாய் பணத்தை கொடுத்து சிறுமியை அழைத்து சென்றதாக தெரியவந்தது  சிறிமியை பணத்திற்காக விற்றது வீட்டில் உள்ளவர்களுக்கு தெரிந்தால் தன்னிடம் தகராறு செய்வார்கள் என்பதற்காக சிறுமியை கடத்தி விட்டதாக தான் நாடகம் ஆடியதாகவும் சிறுமியின் தந்தை போலீசில் ஒப்புக்கொண்டார்,  பணத்திற்கு ஆசைப்பட்டு மகளை விற்றதையும் அவர் ஒப்புக்கொண்டார்.  இந்நிலையில் இடைத்தரகர் மற்றும் அத் தந்தையின் மீது வழக்குப்பதிவு செய்து  போலீசார் சிறையில் அடைத்தனர். பணத்துக்காக தந்தையே மகளை விற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.