9ம் வகுப்பு படிக்கும் தனது மகளையே பாலியல் பலாத்காரம் செய்து கார்ப்பமாக்கிய தந்தையை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கன்னியாகுமரி மாவட்டம் கண்டன்விளை பகுதியை சேர்ந்தவர் மைக்கேல். இவருக்கு திருமணமாகி மனைவி, மகள்கள் உள்ளனர். மூத்தமகளுக்கு 14 வயதாகிறது. அதே பகுயில் உள்ள பள்ளியல் 9ம் வகுப்பு படித்து வருகிறார். 

கடந்த சில நாட்களாக சிறுமி, உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால், கவலையடைந்த அவரது தாய், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதையடுத்து கன்னியாகுமரி அரசு மருத்துவவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தபோது, சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. 

இதுபற்றி தாய், அந்த சிறுமியிடம் விசாரித்தார். அதில், தந்தை மைக்கேல், சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் கூறினார். இதை அறிந்ததும், அவர் அதிர்ச்சியடைந்தார். 

இதுகுறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்படி வழக்குப்பதிவு செய்த போலீசார், மைக்கேலை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.