Asianet News TamilAsianet News Tamil

தந்தையை வெட்டி கொலை செய்த அரசு பள்ளி ஆசிரியர்.. நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுப்பாநாயக்கர் மகன் தசரதன் (55). விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஸ்வத் குமார் (30). இவர் பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

father murder case...Government school teacher arrested tvk
Author
First Published Nov 11, 2023, 10:38 AM IST | Last Updated Nov 11, 2023, 12:48 PM IST

குடும்ப தகராறு காரணமாக மாமனாரை வெட்டி கொலை செய்ய முயற்சித்த போது அதை தடுத்த தந்தையை வெட்டி கொலை செய்த அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுப்பாநாயக்கர் மகன் தசரதன் (55). விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் அஸ்வத் குமார் (30). இவர் பசுவந்தனையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அருணா. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க;- மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம்.. கல்லா கட்டிய பிசினஸ்.. உள்ளே புகுந்து தொக்காக தூக்கிய போலீஸ்..!

father murder case...Government school teacher arrested tvk
 
இந்நிலையில் தனது மாமனார் வீட்டில் உள்ள தனது இரு மகள்களையும் பார்ப்பதற்காக அஸ்வத் குமார் கீழ கூட்டுப் பண்ணையில் உள்ள அவரது மாமனார் வீட்டிற்கு கோபத்துடன் புறப்பட்டுள்ளார். தனது மனைவி,  குழந்தைகள் வராமல் இருப்பதற்கு தனது மாமனார் ஸ்ரீமன் நாராயணசாமி தான் காரணம், அவரை சும்மா விடமாட்டேன் என்று  தனது தந்தையிடம் கூறி விட்டு அரிவாளுடன் அஸ்வத்குமார் கிளம்பி சென்றதாக கூறப்படுகிறது‌. உடனே இதுபற்றி தசரதன் தனது மருமகளுக்கு தொலைபேசி மூலம் தகவல் அளித்தார். சுதாரித்துக் கொண்ட அவர்கள் வீட்டின் பாதுகாப்பு கதவுகளை மூடிக்கொண்டு உள்ளே இருந்தனர்.

மகனின் பின்னாலே தொடர்ந்து வந்த தசரதன் மகனை தடுத்து சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வர முயற்சித்துள்ளார். அப்போது நீ தகவல் சொன்ன காரணத்தினால் தான் கதவை அடைத்து விட்டு உள்ளே இருக்கீறார்கள் என்று ஆவேசம் அடைந்த அஸ்வத் குமார் தான் வைத்திருந்த அரிவாளால் தனது தந்தை தசரதனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தார். 

இதையும் படிங்க;- தீபாவளிக்கு பசங்களுக்கு டிரஸ் எடுக்கணும் வாங்க.. கணவனை வரவழைத்து போட்டு தள்ளிய மனைவி.! எப்படி தெரியுமா?

father murder case...Government school teacher arrested tvk

ரத்த வெள்ளத்தில் சரிந்த தசரதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தசரதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த அஸ்வத் குமாரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios