பெற்ற மகளை கர்ப்பமாக்கிய தந்தை… அரையாண்டு விடுமுறையில் செய்த நாசம்!!

https://static.asianetnews.com/images/authors/ea14f421-6212-5fd4-a5ec-f2773be89cf5.jpg
First Published 12, Feb 2019, 1:30 PM IST
Father harassment his daughter at covai
Highlights

கோவை வெள்ளிமேடு பகுதியில் 7 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தையை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். 

கோவை பூலுவபட்டி அருகே உள்ள வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவருக்கு வயது 35. இவரது மனைவி தனியார் பள்ளியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் அந்த மாணவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சைக்காக தனது மகளை அரசு மருத்துவமனை அழைத்து வந்துள்ளனர். அப்போது ஸ்கேன் செய்து பார்த்ததில் மகள் கர்ப்பமாக இருப்பதாக கூறினர். இதனை அறிந்த தாய் அதிர்ச்சி அடைந்தார். பின் மகளிடம் இது பற்றி கேட்ட போது, தந்தை தான் இதற்கு காரணம் என தெரிவித்து உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த மகளிடம் அவரது தந்தை ராமலிங்கம் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது மனைவி வேலைக்கு சென்று விட்டதாக கூறிகின்றனர். இது தான் அந்த மாணவியின் கர்ப்பமாகியதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மருத்துவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர், ராமலிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து பேரூர் போலீசார் தீவர விசாரணை நடத்தி வருகின்றனர். 7 ஆம் வகுப்பு மாணவியை அவரது தந்தையே கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பேரூர்  காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ஏற்கனெவே இது போலவே பல சம்பவம் நடந்துள்ளதாக பொது மக்கள் கூறுகின்றனர்.

loader