குடிபோதையில் பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .தூத்துக்குடி மாவட்டத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது .  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ,  கல்லூரிக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்லும் பெண்களா இருந்தாலும் சரி,  வீட்டுக்கு திரும்பி வரும்வரை அவரது தாய் தந்தைக்கு கையும் ஓடாது காலும் ஓடாது ,   பாலியல் அச்சுறுத்தல்கள் அந்த அளவுக்கு அதிகரித்திருப்பதுதான் இதற்கு காரணம் .  ஆனால் மற்றவர்களிடமிருந்த மகளை  பாதுகாக்க  வேண்டிய தந்தையே மகளை பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் எந்நேரமும் குடிபோதையில் மிதக்கும் கூலித் தொழிலாளி ஒருவர்,  அன்றாடம் குடித்துவிட்டு வீட்டில் சண்டை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார் ,  வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் ,  மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும்போதெல்லாம் மகளை மிரட்டி அவருடன்  உல்லாசம் அனுபவித்துள்ளார் அந்த நபர் .  விஷயத்தை வெளியில் சொன்னால் தீர்த்துக்கட்டிவிடுவேன் என்று மிரட்டி வந்துள்ளார் அந்த நபர் ஆனால் ஒருகட்டத்தில்  அந்தச் சிறுமியின் நடவடிக்கையில் அவரின் தாய்க்கு சந்தேகம் ஏற்பட்டது . அந்த சிறுமியிடம் அவரின் தாய் விசாரித்ததில் முதலில் நடந்ததை சொல்ல முடியாமல் தேம்பியுள்ளார்.  ஆனால் விடாப்பிடியாக தாய் விசாரித்ததில்  அந்த சிறுமி நடந்தை கூற அதைக் கேட்டு அந்த தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார்.  வீட்டில் தனியாக இருந்தபோது அப்பா தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதை  கூறி அந்த சிறுமி  கதறிஅழுதுள்ளார். 

அதைக் கேட்டு ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த தாய் இது குறித்து அருகில் உள்ள மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் அந்த காமக் கொடூர தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அப்போ சட்டத்தில் கைது செய்தனர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர் மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருந்து பாதுகாக்க  வேண்டிய தந்தையே மகளை சீரழித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.