அரியலூரில் விவசாய நிலத்திற்கு பாதுகாப்பிற்கு சென்ற நபர் வெட்டி படுகொலை

அரியலூர் மாவட்டம் வாரணவாசி அருகே விவசாய நிலத்திற்கு பாதுகாப்பு பணிக்கு சென்ற நபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

farmer killed by unknown persons at farm land in ariyalur district

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்‌. தினமும் இரவு நேரத்தில் தனது விவசாய நிலத்திற்கு காவலுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். 

அதன்படி நேற்று இரவு வயலுக்கு காவலுக்காக சென்ற நிலையில் மீண்டும் காலையில் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்ப உறுப்பினர்கள் வயலுக்கு சென்று பார்க்கையில் மணி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

திண்டுக்கல்லில் தாயுடன் நடந்து சென்ற பெண் கழுத்தை அறுத்து கொலை முயற்சி; கணவன் வெறிச்செயல்

இச்சம்பவம் குறித்து கீழப்பழூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மணியின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மோப்பநாய் உதவியுடன் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios