Asianet News TamilAsianet News Tamil

5 ஆண்டுகள் தலைமறைவு.. கள்ளகாதலியுடன் சிக்கிய பிரபல ரவுடி - அதிரடி கைது !

திருவாரூர் மாவட்டம் சடையங்கால் அருகே உள்ள முனியூர் மேல குடியான தெருவை சேர்ந்தவர் முருகையன் இவருடைய மகன் செல்வகுமார் (37). இவர் மீது தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் கொலை, கொள்ளை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு வழக்குகள் உள்ளன.

Famous thiruvarur rowdy selvakumar arrest by Tamilnadu police
Author
First Published May 24, 2022, 1:10 PM IST

திருவாரூர் மாவட்டம் அரித்துவாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலில் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இது தவிர அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மிரட்டி பணம் பறிப்பது போன்ற வழக்குகள் இவர் மீது உள்ளதால், போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக செல்வகுமார் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த செல்வகுமாரி கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவிப்பிரியா தனிப்படை ஒன்றை அமைத்தார்.

Famous thiruvarur rowdy selvakumar arrest by Tamilnadu police

இந்த தனி படையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்குமார் கணபதி மற்றும் ஏட்டுகள் உமாசங்கர் ராஜேஷ் போலீஸ்காரர்கள் அருள்மொழிவர்மன் நவீன் அழகுசுந்தரம் சுஜித் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இந்த தனிப்படையினர் தலைமறைவாக இருந்த செல்வகுமாரி தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் செல்வகுமார் சிவகாசி கோவில்பட்டி மதுரை உள்ளிட்ட இடங்களில் தங்கியது தெரியவந்தது. இந்த நிலையில் செல்வகுமார் மதுரையில் இருப்பதாக தனி படையினருக்கு தகவல் கிடைத்தது. 

அதன் பேரில் தனிப்படை போலீசார் மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு அவர் தனது கள்ளக்காதலி வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டிற்குள் அதிரடியாக புகுந்து துப்பாக்கி முனையில் செல்வகுமாரை சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சைக்கு அழைத்து வந்து அம்மா பேட்டை போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் கைது செய்தனர். 

Famous thiruvarur rowdy selvakumar arrest by Tamilnadu police

கைது செய்யப்பட்ட செல்வகுமார் மீது 4 கொலை வழக்குகள் 5 கொலை முயற்சி வழக்குகள் வழிப்பறி கொள்ளை டெல்டா மாவட்டத்தை சேர்ந்த முக்கிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவரை மிரட்டி பணம் பறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அரசியல் கட்சி பிரமுகர்களை மிரட்டி பணம் பறித்தது என 25க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்ததால் செல்வகுமார் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி இருந்து வந்துள்ளார். இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் மட்டும் அவருக்கு ஒன்பது பிடிவாரன்டுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் யார்..? வெளியே கசிந்த தகவல்.! வேட்பாளர்கள் இவர்களா ?

இதையும் படிங்க : திமுகவுடன் கூட்டணி வச்சது பெரிய தப்பு..என்ன பண்றது.! புலம்பும் கே.எஸ் அழகிரி !

Follow Us:
Download App:
  • android
  • ios