Asianet News TamilAsianet News Tamil

பிரபல சீரியல் நடிகை துடிக்க துடிக்க துப்பாக்கியால் சுட்டு கொலை.. தீவிரவாதிகள் அட்டூழியம்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொலைக்காட்சி நடிகை படுகொலை செய்யப்பட்டார். அவருடன் 10 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்துள்ளார். 

Famous serial actress shot dead by gunmen .. Terrorists atrocity in kashmir.
Author
Chennai, First Published May 26, 2022, 12:34 PM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் தொலைக்காட்சி நடிகை படுகொலை செய்யப்பட்டார். அவருடன் 10 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்துள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தினரால் நடத்தப்பட்டது என்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். இது காஷ்மீரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட தீவிரவாத அமைப்புகள் இந்தியாவில் ஊடுருவி  தாக்குதல் நடத்தும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் காஷ்மீரில் எல்லை பகுதிகளில் ஊடுருவும் பல்வேறு தீவிரவாத குழுக்கள் ஆங்காங்கே தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த ஒரு வார காலமாக வீடுகளை குறிவைத்து தாக்குவது பொது இடத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியது போன்ற அட்டூழியங்களில் தீவிரவாதிகள் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது 7 வயது மகன் கண்முன்னே சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அந்த வரிசையில் தற்போது தொலைக்காட்சி நடிகை ஒருவர் தனது பத்து வயது மருமகனுடன் வீட்டுக்கு வெளிய சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

Famous serial actress shot dead by gunmen .. Terrorists atrocity in kashmir.

காஷ்மீரை சேர்ந்தவர் பிரபல சீரியல் நடிகை அம்ரின் பட் (34)  பூத்காம் மாவட்டத்தில் தனது வீட்டில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பலத்த காயமடைந்த அமரின் பாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகவும் காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர். டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் அம்ரின் பட், அவர் தனது 10 வயது அண்ணன் மகனுடன் வீட்டுக்கு வெளியில் நடந்து சென்றார். அப்போது தீவிரவாதிகள் அவர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர், 10 வயது சிறுவன் பர்ஹான் ஜுபைர் கையில் குண்டு பாய்ந்தது. அம்ரின் பட்டுக்கு நெஞ்சில் குண்டு பாய்ந்தது கையில் குண்டு பாய்ந்த சிறுவன் மற்றும் அம்ரின் பட் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காயத்துடன் சிறுவன் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இருவரும்  சதுரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், ஆனால் அம்ரின் பட்டின் உடல்நிலை மோசமானதால் ஸ்ரீநகரில் உள்ள SMHS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டார். அவரின் இந்த மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். குப்கர் கூட்டணி அமைப்பு அம்ரின் பட் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். மூன்று லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அம்ரின் பட் இறந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது அத் தீவிரவாதிகளை தேடி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் அமிர்ன் பட்டை எதற்காக கொன்றனர் என்ற விவரம் தெரியவில்லை. 

Famous serial actress shot dead by gunmen .. Terrorists atrocity in kashmir.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் புதன்கிழமை நடந்த என்கவுன்ட்டரில் பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகள் மூன்று பேர் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் ஒரு போலீஸ்காரரும் உயிரிழந்தார். பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரீ பகுதியிலுள்ள நஜிபத் கிராசிங் சோதனை சாவடி அருகே அந்த என்கவுண்டர் நடந்தது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios