பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் வாங்க வருவதாக கூறி பிரபல ரவுடி கொலை.. சடலத்துக்கு மாலை அணிவித்த கும்பல்.!
திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் மகன் கவுரி சங்கர் (32). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
திருச்சியில் பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் வாங்க வருவதாக கூறி ரவுடியை சரமாரியாக வெட்டிக் படுகாலை செய்துவிட்டு சடலத்திற்கு மாலை அணிவித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்வேறு வழக்குகள் நிலுவை
திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெரு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் மகன் கவுரி சங்கர் (32). பிரபல ரவுடியான இவர் மீது ஸ்ரீரங்கம், திருவானைக்காவல் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஜாமீனில் வெளியே வந்த இவர் மண்ணச்சநல்லூரை அடுத்த வெங்கக்குடி பகுதியில் தேங்காய் நார் பிரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கிருந்த கயிறு தயாரித்து வெளியூர்களுக்கு அனுப்புகிறார். பெரும்பாலான இரவு நேரங்களில் கவுரிசங்கர் அந்த தொழிற்சாலையிலேயே தங்குவார்.
பிரபல ரவுடி கொலை
இந்நிலையில், நேற்று நள்ளிரவு தனது கம்பெனியில் தனியாக கட்டிலில் அமர்ந்து கவுரி சங்கர் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது இருச்சர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் 4 பேர் அரிவாளால் கவுரி சங்கரை சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த கவுரி சங்கர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அவரது உடலுக்கு மாலை அணிவித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். அதிகாலையில் அந்த பகுதியில் நடைபயிற்சி சென்றவர்கள் கவுரி சங்கர் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
போலீஸ் விசாரணை
உடனே இதுதொடர்பாக மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கவுரி சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் பிறந்தநாளுக்கு ஆசீர்வாதம் வாங்க வருவதாக கூறி ரவுடி சங்கரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.