சார்ஜர் ஒயரால் கணவனின் கழுத்தை இறுக்கி துடிதுடிக்க கொன்ற மனைவி.. என்ன காரணம் தெரியுமா?

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் காளிதாஸ் (34). இவரது மனைவி ஜெயா(26). இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

Family dispute... wife who killed her husband

குடும்ப தகராறில் மனைவி தனது கணவரின் கழுத்தை செல்போன் சார்ஜர் ஒயரால் இறுக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே உள்ள கூத்தியார்குண்டு ஆதிதிராவிட காலனியை சேர்ந்தவர் காளிதாஸ் (34). இவரது மனைவி ஜெயா(26). இவர்கள் 2 பேரும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால், மனைவி கோபித்துக்கொண்டு பக்கத்து வீட்டு மாடியில் குழந்தைகளுடன் குடும்பம் நடத்தி வந்தார். 

இதையும் படிங்க;- லாட்ஜில் கொசு விரட்டும் கருவியில் ரகசிய கேமரா.. புதுமண தம்பதியின் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டல்.!

Family dispute... wife who killed her husband

இந்நிலையில், விபத்தில் சிக்கிய கணவரை பார்ப்பதற்காக ஜெயா வீட்டுக்கு வந்துள்ளார். அப்போதும் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜெயா அங்கிருந்த செல்போன் சார்ஜரை எடுத்து அதன் ஒயரால் கணவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். 

இதையும் படிங்க;-  வேணாம் என்ன விட்டுடு ப்ளீஸ்! நான் உனக்கு அண்ணி! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கதறவிட்ட கொழுந்தன்! நடந்தது என்ன?

Family dispute... wife who killed her husband

இது குறித்து அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காளிதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜெயாவை போலீசார் கைது செய்துள்ளனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios