பணக்கார பெண்களான விவாகரத்து பெற்ற பெண்கள் மற்றும் கணவனை இழந்த விதவைகளுக்கு கல்யாண ஆசை காட்டி அவர்களை வலை வீசி அவர்களிடம் இருந்து பல கோடி பணத்தை பறித்துக்கொண்டு, பலாத்காரம் செய்து ஏமாற்றிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட சக்ரவர்த்திக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. ஆனால், பணக்காரனாக வேண்டும் என்ற ஆசையில் பெண்களின் ஆசையை தூண்டி அவர்களை தனது வலையில் விழ வைத்து கோடிக்கணக்கில் ஆட்டையை போட்டது அம்பலமாகியிருக்கிறது.  அதற்காக திருமண தகவல் மையத்தில் பல பெயர்களில் வித விதமாக போட்டோ போட்டு பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில், தனக்கு திருமணம் ஆகவில்லை என விவரம் போட்டு,  கணவனால் கைவிடப்பட்ட பெண்களும், விதவைகளுக்கு என்று குறிப்பிட்டிருந்தார். சக்கரவர்த்தி, இவரது வலையில் சிக்கியவர்கள் நன்றாக படித்து நல்ல சம்பளம் வாங்குபவர்கள்தான். சென்னை, திருச்சி என பெரிய நகரங்களில் டாக்டர்களாக வேலை செய்யும் பெண்கள்தான் இந்த சக்கரவர்த்தியின் வலையில் வீழ்ந்துள்ளனர்.  அந்த பெண்களுடன் பணம் , நகை மட்டுமல்ல உடல் ரீதியாக உல்லாசமாக இருந்துள்ளார். 

இந்நிலையில், திருச்சி பெண் டாக்டர் திருச்சியைச்கணவரை இழந்த பெண் டாக்டர்க்கு, ஒரு குழந்தை மட்டும் உள்ளது. மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார். அதைப்பார்த்த சக்ரவர்த்தி அந்த டாக்டருக்கு வரை வீசினான். குழந்தை இருந்தாலும் பரவாயில்லை மறுவாழ்வு கொடுக்கத் தயார் என்று செல்போனில் பேசினார். சக்கரவர்த்தியை நம்பிய அவர்கள், பழகியதால் தனிமையில் சந்தித்து உடல் ரீதியாகவும் உல்லாசம் அனுபவித்து பல லட்சம் பணத்தை வாங்கிக்கொண்டான்.  

மோசடியை கண்டுபிடித்த அந்த பெண் டாக்டர் நாளுக்கு நாள் சந்தேகமானதால்,  திருவண்ணாமலைக்கு நேராக சென்றார் அந்த பெண் டாக்டர். அந்த வீட்டில் மனைவி, குழந்தைகள் இருந்தனர். அதோடு சென்னையைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரின் கடிதமும் கிடைத்தது. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்ட பல திடுக் தகவல்கள் தெரிந்தது. 

இதனையடுத்தே திருச்சி லால்குடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவர் மீது நடவடிக்கை இல்லாமல் போகவே  உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கார் டிரைவரும் கைது மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சக்கரவர்த்தியை கைது செய்யாவிட்டால் திருச்சி எஸ்பி நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்று கண்டித்தனர். 

இதனையடுத்தே சக்ரவர்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த கார் டிரைவர் முருகனையும் கைது செய்தனர். இருவரையும் விசாரித்ததில் கணவனால் கைவிடப்பட்ட, விதவை பெண்களாக பார்த்து வலை வீசி உடல் ரீதியாக நெருங்கி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்தும், பணம் நகை வாங்குவதே வேலையாக சக்கரவர்த்தி இருந்துள்ளார். நகை பணம் மட்டும் பறித்தல் சொல்லிவிடுவார்கள் என்பதால் உடல் ரீதியாக தொடர்பு வைத்தால் வெளியே சொல்லமாட்டார்கள் என பல பெண் டாக்டர்களை ஏமாற்றியிருப்பதும் தெரிகிறது.