நாமக்கல்லில்  ஆஞ்சநேயருக்குப் பூஜை செய்தபோது தவறி விழுந்து  அர்ச்சகர்  மரணமடைந்த துயர சம்பவம்  நாடு முழுவதுமுள்ள ஆஞ்சநேயர் பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  அவர் இறந்த அடுத்த நாளில் அர்ச்சகர் பெயரில் ஃபேஸ்புக்கில் போலியாக வேண்டுகோள் விடுத்து சுமார் ரூ.15 லட்சம் வரை நிதி திரட்டி மோசடி செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 4 மாதங்களாக வெங்கடேஷுக்கு ஏதோ காரணத்தால் சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. வெங்கேடேஷ் இறந்ததும் அவரின் சகோதரர் நாகராஜ் கோயில் நிர்வாகத்தை அணுகி நிலுவை சம்பளத்தைக் கேட்டுள்ளார். ஆனால் கோவில் நிர்வாகமோ வங்கிக்கணக்கு ஏதாவது தாருங்கள், அதில் பணம் போடுகிறோம் என கோவில் நிர்வாகம் சொன்னதாம் இதனையடுத்து நாகராஜ் தனது சித்தப்பா மகன் கிருஷ்ணமூர்த்தி என்பவரின் கரூர் வைஸ்யா பேங்க் கணக்கைக் கொடுத்துள்ளார்.

இந்த கேப்பில், வெங்கடேஷ் குடும்பத்தினர் அவரது உடலை கூட அடக்கம் செய்ய முடியாமல் தவிப்பதாக யாரோ ஒருவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டு கிருஷ்ணமூர்த்தின் வங்கிக் கணக்குடன் நாகராஜ் செல்போன் எண்ணையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவு போட்ட அடுத்த நிமிடத்திலிருந்து ஆஞ்சநேயர் பக்தர்கள் கொடுத்து உதவினார். இந்த வாங்கி கணக்கில் சுமார் 200 பேர் பணம் செலுத்தியுள்ளனர். சுமார் ரூ15 லட்ச ரூபாய் வங்கிக்கணக்கில் சேர்ந்துள்ளதாகக் கரூர் வைஸ்யா வங்கியின் அதிகாரி உறுதி செய்துள்ளார்.

கோயிலில் வெங்கடேஷுடன் பணியாற்றியவர்கள் இதுபோன்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. கிருஷ்ணமூர்த்தி ஒரு வேளை இந்தக் காரியத்தை செய்திருக்கலாம் என்று குடும்ப உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர். தொடர்ந்து ஏற்பட்ட மனவுளைச்சலால் கிருஷ்ணமூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து அர்ச்சகரின் தம்பி நாகராஜ் முன்னணி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "முகநூலில் எனது மொபைல் எண்ணையும் பதிவிட்டுள்ளனர். வெளியூரிலிருந்து அழைப்பு வந்துகொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் போனை போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டேன். என் சகோதரர் உடலுக்கு இறுதிச்சடங்குகள் பண்ண எங்களிடம் வசதி இருக்கிறது. எங்களுக்குப் பணம் அனுப்பியவர்களுக்குப் பணத்தை திரும்பச் செலுத்த வங்கியின் உதவியை நாடியுள்ளோம் எனக் கூறினார்.