திருமணத்துக்கு மறுத்த ஆத்திரத்தில் ஃபேஸ்புக் காதலியின் போட்டோக்களை காதலன் தனது ஃபேஸ்புக்கில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்த திவ்யா என்ற பெரம்பலூரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி படித்து வருகிறார். இவர் பேஸ்புக்கில் அடிக்கடி கருத்துக்களை பரிமாறி வந்தார். இதன் விளைவாக மாணவிக்கும் தர்மபுரி அருகே உள்ள மணலூர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டது. இந்த நட்பில் இவர்கள் தினமும் தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டு இருந்துள்ளனர், கடந்த ஒரு வருஷமாக ஃபேஸ்புக்கில் பழகி வந்த இவர்கள் காதலிக்க தொடங்கியுள்ளனர். 10-ம் வகுப்பு வரை படித்த பாலமுருகன் பேஸ்புக்கில் திவ்யாவை கவரும் விதத்தில் காதல் வயப்படும் பதிவாக போட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாலமுருகன் அந்த திவ்யாவிடம் மணலூர் வருமாறு மனம் உருக உருக பேசியுள்ளார். இதில் மயங்கிய திவ்யா பாலமுருகனை தேடி மணலூர் சென்றார். ஆனால் அங்கு அவர் அந்த திவ்யாவை அனுபவித்தே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் அந்த மாணவியை கண்ட இடத்தில் தொட்டு பேசியுள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பால முருகனை அசிங்கமாக பேசி திட்டியுள்ளார்.  

உடனே திவ்யா அங்கிருந்து தப்பித்து திட்டக்குடி வந்து விட்டார். இதனையடுத்து பாலமுருகனிடம் பேசுவதை துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாலமுருகன் திவ்யாவிற்கு எவ்வளவு போன் போட்டும் எடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் கோபத்தில் இருந்த பாலமுருகன், அவர் மாணவியிடம் எடுத்துக்கொண்ட போட்டோக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி பாலமுருகனை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார். ஆனால் அவர் என்னை கல்யாணம் செய்யவில்லை என்றால், என்னிடம் மீதி இருக்கும் போட்டோக்களை ஃபேஸ்புக்கில் மீண்டும் வெளியிடுவேன் என்று மிரட்டினார். ஆனால் மாணவி உன் போக்கு சரி இல்லை. எனவே நான் உன்னை திருமணம் செய்யவே விருப்பமில்லை என்று சொல்லி போனை துண்டித்தார். இதில், ஆத்திரம் அடைந்த பாலமுருகன் மேலும், தன்னிடம் இருந்த பல போட்டோக்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

போட்டோக்களை பார்த்து துடித்த திவ்யா நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் சொல்லி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். உடனடியாக அவர்கள் திட்டக்குடி போலீசில் புகார் செய்தனர். போலீஸ் பாலமுருகன் மீது சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்துதல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் தலைமையில் விரைந்த போலீஸ் பாலமுருகனை கைது செய்தனர்.