திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.  அப்போது இவரது ஊரைசேர்ந்த  20 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. 

அந்த மாணவி  சூலூரில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் கல்லூரியில் 2-ம்ஆண்டு படித்து வருகிறார்.அஜித்குமாரும், கல்லூரி மாணவியும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் அந்த நட்பு காதலாக மாறியது. இருவரும் தினமும் வாட்ஸ்- அப் மூலம் வீடியோ காலில் பேசி வந்தனர்.

தொடர்ந்து அவர்களிடையே நெருக்கம் அதிகரித்ததால் 2 பேரும் நிர்வாண நிலையில் செல்போன் மற்றும் லேப்டாப் வீடியோ காலில் பேசி உள்ளனர். மேலும் குளியல் அறை வீடியோவையும் மாணவி அஜித்குமாருக்கு அனுப்பி உள்ளார்.

பின்னர் 2 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார் மாணவி நிர்வாண நிலையில் இருக்கும் வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்தார். 

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவி நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறினார். அவர்கள் இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்குமாரை கைது செய்தனர்.