ஐ.நா சபை அலுவலக பணிக்காகக் கொடுத்த வாகனத்தில் அதிகாரி ஒருவர் உடலுறவில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.நா சபை அலுவலக பணிக்காகக் கொடுத்த வாகனத்தில் அதிகாரி ஒருவர் உடலுறவில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டில் ஐக்கிய நாடுகளின் சபைக்கு பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு அலுவலக பணிகளுக்காக வாகனம் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வாகனத்தில் பயணம் செய்யும்போதே அதிகாரி மீது சிவப்பு நிற உடை அணிந்த ஒரு பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். சிறிது நேரத்தில் இருவரும் உடலுறவில் ஈடுபட்டார்கள். இதுதொடர்பான வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் இந்த செயலுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தார்கள்.

இந்நிலையில் நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஐ.நா சபை விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இது தொடர்பாகப் பேசிய ஐ.நா சபையின் செய்தி தொடர்பாளர் டுஜாரிக், “நாம் எதற்காகப் பேசுகிறோமோ, எதற்காக பணியாற்றுகிறோமோ, அவை அனைத்திற்கும் எதிரானது இது போன்ற செயல்.” என்று கூறி உள்ளார். சமூகவலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலான நிலையில், பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

Scroll to load tweet…

அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களை அவர்களது வீடுகளிலோ அல்லது தனி அறையிலோ வைத்துக்கொள்ள வேண்டும். அலுவலக பணிக்காகக் கொடுக்கப்பட்ட வாகனங்களை இதுபோன்ற செயல்களுக்குப் பயன்படுத்துவது தவறான முன்னுதாரணமாக மாறிவிடும், எனக் கூறியுள்ளார்கள்.