Asianet News TamilAsianet News Tamil

என்னை கற்பழித்தார்... ஒரு வருஷமா உடல் ரீதியாக சீரழித்தார்! பல பெண்கள் கற்பை சூறையாடினார் ஆதாரம் இருக்கு! மாணவி பரபரப்பு புகார்

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளை சீரழித்துள்ளார் என்று அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி பரபரப்பு பேட்டியளித்துள்ளார் , பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ex minister swami chinmayanand harassment law student
Author
Uttar Pradesh, First Published Sep 10, 2019, 11:20 AM IST

முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்த் பல மாணவிகளை சீரழித்துள்ளார் என்று அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மாணவி பரபரப்பு பேட்டியளித்துள்ளார் , பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஷாஜகான்பூர் நகரில் உள்ள ஸ்வாமி சுக்தேவானந்த் சட்டக் கல்லூரியின் தலைவர் சின்மயானந்த், வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இணை அமைச்சராக இருந்துள்ளார். இவரின் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வரும் 23 வயது நிரம்பிய மாணவி ஒருவர், சின்மயானந்த் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டி கடந்த மாதம் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் வெளிட்டார். இந்த வீடியோ வெளியான அடுத்த நாளே மாணவி காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ex minister swami chinmayanand harassment law student

இதனையடுத்து அந்த மாணவியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். வழக்கு தொடர்பாக திறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை மேற்கொண்டுவந்த நிலையில், காணாமல்போன அந்த மாணவி 18 நாட்களுக்கு பிறகு நேற்று ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டார். அப்போது பாதிக்கப்பட்ட மாணவி செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது கூறியதாவது, சின்மயானந்த் என்னை கற்பழித்து கொடுமைப்படுத்தினார். அதன் பிறகும் கூட ஒருவருடமாக தொடர்ந்து அவரில் உடல் ரீதியாக என்னை அனுபவித்தார். 
முன்னதாக இதுதொடர்பாக டெல்லி, லோதி சாலை போலீசில்  புகார் கொடுத்தேன். ஆனால் டெல்லி போலிஸார் என்னுடைய புகாரை ஷாஜகான்பூர் போலீசாரை விசாரிக்க அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இன்னும் ஷாஜகான்பூர் போலிஸார் வழக்கு கூட பதிவு செய்யவில்லை.

இதனிடையே நேற்று திறப்பு புலனாய்வுக் குழு என்னிடம் பல மணி நேரம் விசாரத்தனர். அப்போது சின்மயானந்த் குறித்தும் தனக்கு நேர்ந்த உடல் ரீதியாக நான் நானுபவித்த கொடுமை குறித்து கூறினேன். ஆனால் இதுவரை அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. என்னுடைய தந்தை காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, அவரை அங்குள்ள போலிஸார் மிரட்டியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் மாவட்ட ஆட்சியர் இந்திரா விக்ரம் சிங்கிடம் இருந்தும் மிரட்டல் வந்துள்ளது.

ex minister swami chinmayanand harassment law student

இதனையடுத்து நான் தங்கியிருந்த விடுதி அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. என் அறையை ஊடகங்கள் முன்பு திறக்கப்பட வேண்டும். என்னிடம் உள்ள பல வீடியோ ஆதாரங்களை சரியான சமயத்தில் வெளியிடுவேன். என்னைப் போலவே, பல பெண்களை, சின்மாயனந்த் கற்பழித்துள்ளார். அவர்கள் எத்தனை பேர் என்பதும் எனக்கு தெரியும். பாதிக்கப்பட்டவர்களில், சின்மயானந்துக்கு எதிராக, துணிந்து போராட முன்வந்திருப்பது நான் மட்டுமே என அந்த மாணவி கூரியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios