கோவை மாவட்டம் சுந்தராபுரம் அருகே இருக்கிறது கல்லுக்குழி கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் சக்தி வேல்(42). சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பாக விதவை பெண் ஒருவருக்கு மறுவாழ்வு கொடுத்து திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். சக்திவேல் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார்.

மகளுடன் கோவையில் சக்தி வேல் தனியாக வசித்து வந்த நிலையில் அவ்வப்போது திருநெல்வேலியில் இருக்கும் தந்து தனது சகோதரியிடம் பேசுவார் என்று கூறப்படுகிறது. ஆனால் கடந்த 6 மாதமாக சக்திவேலிடம் இருந்து எந்த அழைப்பும் வராமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரின் சகோதரி, தனது மகன் தினேஷை கோவையில் இருக்கும் சக்திவேலின் வீட்டிற்கு அனுப்பி பார்த்து வர சொல்லியிருக்கிறார். அதன்படி கோவை வந்த தினேஷ், தனது மாமா சக்திவேல் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டில் சக்திவேலை, தினேஷ் அழைத்திருக்கிறார். ஆனால் எந்த பதிலும் வராமல் இருந்துள்ளது. இதையடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு சக்திவேல் எலும்பு கூடாக உயிரற்று கிடந்தார். உடனடியாக குனியமுத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தார். விரைந்து வந்த காவலர்கள் அப்பகுதி மக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், சக்திவேலுக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு பெண்ணுக்கும் வெகுநாட்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

அதை பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்குள்ளும் தகராறும் நிகழ்ந்துள்ளது. அதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் சக்திவேல் கொலைசெய்யப்பட்டிருக்க கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். அதனால் அப்பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருக்கிறார். சக்திவேலின் உடல் எலும்பு கூடாக கிடப்பதால் அதை மருத்துவமனைக்கு கொண்டு செல்லமுடியவில்லை. இதனால் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.