சென்னையில் மயிலாப்பூர் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் 11 கோடிரூபாய் ரொக்கம் மற்றும் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தென் கொரியா நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட 5 பேரை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை  மயிலாப்பூரில் உள்ள விடுதியில் ஒரு கும்பல் பணம் மற்றும் தங்கத்துடன் பதுங்கி இருப்பதாக பொருளாதார குற்ற புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.

இந்த ரகசிய தகவலின் பேரின் அந்த விடுதிக்கு சென்ற வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அங்கு  சோதனையில் ஈடுபட்டனர்.

அங்கு ஒரு அறையில் கொரியாவைச் சேர்ந்த இருவர் உள்ளிட்ட 5 பேர் இருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட சோதனையில் 11 கோடி ரூபாயும், 7 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டன.

அந்த 5 பேரையும் கைது செய்த அவர்கள் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நநடத்தி வருகின்றனர்.