கோவை மாவட்டம் பொள்ளச்சியைச் சேர்ந்தவர் ரேவதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 10 வயது சிறுமியான இவர் அங்கிருக்கும் ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வசிக்கும் அதே பகுதியில் பொன்னுசாமி(53) என்பவரும் வசித்து வருகிறார். பொன்னுசாமி, சிறுமி ரேவதிக்கு தாத்தா முறையில் உறவினராவார். இதனால் அடிக்கடி சிறுமியின் வீட்டுக்கு அவர் வந்து சென்றுள்ளார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அவரது தாயார் வெளியில் கடைக்கு சென்றிருந்திருக்கிறார். அதையறிந்த பொன்னுசாமி சிறுமியின் வீட்டுக்கு வந்துள்ளார். சிறுமியிடம் நைசாக பேச்சுக்கொடுத்த அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார். அதை எதிர்பார்க்காத சிறுமி, அதிர்ச்சியில் கூச்சல்போட்டுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள்ளாக பொன்னுசாமி அங்கிருந்து தப்பி விட்டார். 

சிறுமியின் தாயும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்தவர்களிடம் பொன்னுசாமி தன்னிடம் தவறாக நடக்கமுயன்ற விஷத்தை சிறுமி கூறி அழுதுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். வழக்கு பதிவு செய்த காவலர்கள் பொன்னுசாமியை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் தற்போது அவர் காவல்துறையில் சிக்கியுள்ளார். போக்சோவின் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.