சித்தூர் மாவட்டம் கலிகிரியைச் சேர்ந்த பிரசாத் மற்றும் தன்லட்சுமி ஆகியோர் ஹைதராபாத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். அங்கு டிஎஸ்பியாக இருந்த துர்கா பிரசாத் என்பருக்கும் அந்த தம்பதியினருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.  அவர்கள் அனைவரும் நண்பர்களாக பழகி வந்தனர்.

தனலட்சுமி குடும்பத்தின் பொருளாதார நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட டிஎஸ்பி, கணவர் பிரசாத்திற்கு திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளார்.இதை தனலட்சுமி நம்பியதை தொடர்ந்து, அவருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளார். அது நாளடைவில், கள்ளக் காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி சந்தித்து  தனிமையில்  உல்லாசமாக இருந்துள்ளனர். இந்நிலையில் துர்காபிரசாத் அமராவதி அருகிலுள்ள மங்களகிரி ஆயுதப்படை போலீசுக்கு மாறுதலாகி சென்றார்.
 


இதை தொடர்ந்து பிரசாத் - தனலெட்சுமி குடும்பத்தை திருப்பதியில் குடியமர்த்தியுள்ளார் டிஎஸ்பி துர்கா பிரசாத். அவர்கள் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தனலட்சுமியும், டிஎஸ்பி துர்காபிரசாத்தும் அடிக்கடி தனிமையில் இருப்பதை கணவர் பிரசாத் கண்டுபிடித்தார். அவர்கள் இருவரையும் கையும், களவுமாக பிடிக்க பிரசாத் திட்டமிட்டார்.

இந்நிலையில், நேற்று அதிகாலை தனலட்சுமிக்கு போன் செய்த டிஎஸ்பி. திருப்பதியில் உள்ள வீட்டிற்கு வருவதாக கூறியுள்ளார். இதை எப்படியோ அறிந்து கொண்ட பிரசாத், இருவரையும் கையுளம் களமாக பிடிக்க காத்திருந்தார்.

டிஎஸ்பி துர்கா பிரசாத் வீட்டிற்கு வந்து மனைவி தனலட்சுமியுடன் தனிமையில் உல்லாசமாக  இருந்த போது, திருச்சானூர் போலீசாருடன் பிரசாத் வீட்டிற்கு சென்றார். போலீசார் வருவதை அறிந்து கொண்ட டிஎஸ்பி துர்காபிரசாத் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆனால் அவரைப் பிடித்த போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.