இலங்கையைச் சேர்ந்தவர் தாரகேஸ்வரி. கடந்த சில ஆண்டுகளாக சென்னை வளசரவாக்கத்தில் தனது பேரனுடன் வசித்து வருகிறார். இவரது தம்பி குகதாசன்(49). சபரிமலைக்கு மாலை அணிந்து சென்று வந்த இவர், சென்னையில் இருக்கும் சகோதரி வீட்டில் தங்கி இருக்கிறார். குகதாசன் அதிகமான மதுப்பழக்கத்திற்கு அடிமையானார் என்று தெரிகிறது. தினமும் குடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்தநிலையில் குடிப்பதற்காக வீட்டில் இரண்டு பாட்டில்கள் வாங்கி வைத்துள்ளார். அதில் ஒரு பாட்டில் சரக்கை முழுவதுமாக குடித்துள்ளார். மற்றொரு பாட்டிலை தேடிய போது அதை தாரகேஸ்வரி மறைத்துவைத்ததை தெரிந்து அவரிடம் கேட்டுள்ளார். ஆனால் தாரகேஸ்வரி கொடுக்க மறுத்துள்ளார். இதனால் குடிபோதையில் இருந்த குகதாசன் ஆத்திரத்தில் சகோதரியை கத்தியால் சரமாரியாக குத்தி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த அவர் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தாரகேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர் பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தப்பி ஓட முயன்ற குகதாசனை வளைத்து பிடித்த அவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவலர்கள் தாரகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர். குகதாசன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது கொலைவழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Also Read: 'ஒரு நாள் தலைமையாசிரியர்'..! அதிரடி காட்டி அசத்திய அரசு பள்ளி மாணவி..!