விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான போதைப்பொருள்... சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!!
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு பயணிகளிடம் இருந்து 3 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு பயணிகளிடம் இருந்து 3 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். கினியாவிலிருந்து எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா வழியாக பயணித்த ஆப்பிரிக்காவை சேர்ந்த பயணி ஒருவர் சுமார் 1.5 கிலோ ஆம்பெடமைன் எனப்படும் போதைப்பொருளை விமானத்தில் கடத்தி வந்துள்ளார். விமான நிலையத்தில் அவரை பரிசோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அவர் மறைத்து வைத்து கொண்டு வந்த போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: போனில் வந்த லிங்கை கிளிக் செய்தவருக்கு; 1 லட்சம் கடன் பெற்றதாக வந்த செய்தியால் அதிர்ச்சி
இதை அடுத்து அமெரிக்க பயணி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதேபோல் மற்றொரு சோதனையில், ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 438 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த மூவரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் காரனோடை சுங்கச்சாவடியில் வேன் மற்றும் கார் வழிமறிக்கப்பட்டது.
இதையும் படிங்க: “முந்திரி தோப்பில்” நகைக்காக நடு இரவில் நடந்த பகீர் கொலை.. அதிர வைக்கும் பின்னணி !!
போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வேனில் தற்காலிக கூரையை கவனித்து அதை அகற்றியபோது அதில் 197 பாக்கெட்டுகளில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்த் அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அடுத்தடுத்து நடத்தப்பட்ட சோதனை கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. இதை அடுத்து போதை பொருள் நடமாட்டத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.