இத்தகைய உயர் ரக மாரிஜூவானா இந்தியாவில் ஒரு கிராமிற்கு ரூ. 3 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவில் இருந்து போதை பொருள் கடத்தி வந்து மும்பையில் வினியோகம் செய்து வந்த கும்பலை மும்பை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேலும் கும்பலை சேர்ந்த நபரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
அமெரிக்காவில் இருந்து இந்தியா வரும் கொரியர் பார்சலில் நார்கோடிக் போதை பொருள் உள்ளதாக மூத்த சுங்கத் துறை அதிகாரிக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து விமான நிலையம் வரும் கண்டெயினர்களை விமான நிலையத்தின் விசேஷ கார்கோ ஆணையரக அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். இதை அடுத்து சோதனைகளை தீவிரப்படுத்தினர்.
பறிமுதல்:
இதன் காரணமாக கலிபோர்னியாவில் இருந்து ஏர் பியரிபையரில் மறைத்து வைத்து இந்தியா கொண்டுவரப்பட்ட 910 கிராம் மாரிஜூவானாவை அதிகாரிகள் கைப்பற்றினர். இதை அடுத்து மும்பை சர்வதேச விமான நிலையத்தின் கொரியரில் மேலும் மூன்று பாரசல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். இவை ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் ஏப்ரல் 25 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் அமெரிக்காவில் இருந்து மும்பை விமான நிலையம் வந்தவை ஆகும்.
தீவிர தேடுதலை அடுத்து வெவ்வேறு வீட்டு உபயோக பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டு இருந்து 27.478 கிலோ கிராம் எடை மதிப்பு கொண்ட உயர் ரக ஹைட்ரோபோனிக்ஸ் மாரிஜூவானா பறிமுதல் செய்யப்பட்டது. செயற்கை நீர்வீழ்ச்சி, போலி மர லெதர் இருக்கை, ப்ரோபேன் கியாஸ் பயர் பிட் டேபில் போன்ற பொருட்களில் இருந்து இவை மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.

மொத்த மதிப்பு:
இத்தகைய உயர் ரக மாரிஜூவானா இந்தியாவில் ஒரு கிராமிற்கு ரூ. 3 ஆயிரம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள மாரிஜூவானா மொத்த மதிப்பு சுமார் எட்டு கோடி ரூபாய் வரை இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்டவைகளின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, சோதனை மேலும் பலப்படுத்த அதிகாரிகள் மேலும் திட்டமிட்டுள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் மற்றும் டெலிவரி பணியாளர்கள் வேடத்தில் இருந்த அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தேடுதல் வேட்டை:
இதன் மூலம் நபர் ஒருவர் பொருட்களை வாங்கி அதனை வேறொரு முகவரியில் வினியோகம் செய்தார். அந்த முகவரியில் இருந்தவர்கள், வேறொருவரை அழைத்து பார்செலை எடுத்து செல்ல தெரிவித்தார். இவ்வாறு பார்செலை வாங்கிய மூன்றாவது நபர் தான், இதன் பின்னணியில் இருந்துள்ளார்.
இவ்வாறான சோதனையின் போது மேலும் 20 கிலோகிராம் மாரிஜூவானா, 120 கிராம் ஹாசிஷ் மற்றும் இதர வகைகளை சேர்ந்த போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றிய தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
