Asianet News TamilAsianet News Tamil

வரதட்சணை கொடுமையால் இளம் பெண் உயிரிழந்த விவகாரம்.. கணவருக்கு சரியான ஆப்பு வைத்த கேரள அரசு..!

கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால்  ஜூன் 21ஆம் தேதியன்று இளம்பெண் விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

Dowry victim Vismaya husband Kiran dismissed... Kerala government
Author
Kerala, First Published Aug 7, 2021, 8:56 PM IST

கேரளாவில் வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் விஸ்மயா உயிரிழந்த விவகாரத்தில், அவரது கணவர் கிரண் குமாரின் அரசு பணி பறிக்கப்பட்டுள்ளது. 

கேரளாவில் வரதட்சணைக் கொடுமையால்  ஜூன் 21ஆம் தேதியன்று இளம்பெண் விஸ்மயா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்  அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்கொலை செய்து கொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட கார் பிடிக்காத காரணத்தால் தனது கணவர் தன்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கி, தனக்குக் காயம் ஏற்படுத்திய புகைப்படங்கள் வெளியானது.

Dowry victim Vismaya husband Kiran dismissed... Kerala government

இதனையடுத்து கிரண் குமார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதில் கிரண் குமார் துறையின் சட்ட திட்டங்களை மீறியுள்ளது உறுதியானதால் அவரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Dowry victim Vismaya husband Kiran dismissed... Kerala government

இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கேரளா எப்போதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை களுக்கு கண்ணை மூடிக்கொண்டு இருக்காது என்று அவர் கூறியுள்ளார். வரதட்சணை கொடுமையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios