ஒண்ணுல்ல… ரெண்டுல்ல… 250 சிறுமிகளை கற்பழித்த காமக் கொடூர டாக்டர் !!
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு சிறுமியரிடம், பாலியல் பலாத்காரம் மற்றும் சீண்டல்களில் ஈடுபட்டு கைதான டாக்டரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், அவர் 250க்கும் அதிகமான சிறுமிகளை கற்பழித்தது தெரிய வந்துள்ளது.
பிரான்சை சேர்ந்தவர், டாக்டர் ஜோயல் லீ ஸ்கார்னெக். 68 வயதான இவர் அறுவை சிகிச்சை நிபுணர். மத்திய மற்றும் மேற்கு பிரான்சில் உள்ள மருத்துவமனைகளில், பணியாற்றி ஓய்வு பெற்றார்.
டாக்டர் ஜோயல், தன் வீட்டருகே வசிக்கும், 6 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் பெற்றோர், கடந்த 2017ல் புகார் அளித்தனர். இதையடுத்து, இரண்டு உறவுக்கார சிறுமியர் மற்றும் சிகிச்சை பெற வந்த சிறுமி உட்பட மேலும் மூவர், டாக்டர் மீது பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில், டாக்டர் ஜோயலை கைது செய்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணை, நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஜோயலின் வீட்டில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது, அவரது, 'டைரி' கைப்பற்றப்பட்டது. அதில், 250க்கும் அதிகமான பெண்கள் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அந்த டைரியில், பெண்களை எப்படியெல்லாம் சீண்டி, தன் பாலியல் இச்சைக்கு இரையாக்கி கொண்டார் என்பதை, காட்சிகளாக விளக்கி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அந்த டைரியில் குறிப்பிடப்பட்டுள்ள சிறுமியரில், 209 பேரை தொடர்பு கொண்டனர்.
அதில் பலர், இப்போது பெரிய பெண்களாக வளர்ந்து விட்டனர். அவர்கள் சிறுமிகளாக இருந்த போது, டாக்டர் ஜோயலால், அவர்கள் பாலியல் பலாத்காரத்திற்கும், சீண்டல்களுக்கும் ஆளானதை ஒப்புக் கொண்டனர்.
'சிறுமிகளாக இருந்தபோது, பயத்தின் காரணமாக அவர்கள் வெளியே சொல்லவில்லை' என, அவர்கள் கூறினர். டாக்டர் ஜோயல், கடந்த, 30 ஆண்டுகளாக, சிறுமியரைச் சீரழிக்கும் காமக் கொடூரனாக இருந்தது, விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு, பிரான்சில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.