விபத்தில் பலியான  மனைவியின் சடலத்தோடு அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக்கை மூடச்சொல்லி, சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் டாக்டர் ரமேஷ்,  சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காக பல்வேறு இடங்களில் வேலை பார்த்துள்ளார்.  சாதாரண மக்களுக்காக சேவை செய்து வந்துள்ள இவர்,  மிகவும் பிரபலமான இவர் மகள் சாந்தலா ஆனைகட்டியில் உள்ள ஒரு  தனியார் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று மாலை மகளை பள்ளியிலிருந்து அழைத்து  வந்துள்ளார் அப்போது, ஜம்புகண்டி அருகில் நடந்து வந்து கொண்டிருந்தபோது, எதிரில் வேகமாக வந்த பைக் ஷோபனாவின் ஸ்கூட்டி மீது வேகமாக மோதிய பயங்க விபத்தில் சோபனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

இவரது மகள் சாந்தலா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடினார். இந்த சம்பவத்தை அறிந்த டாக்டர் ரமேஷ் விரைந்து வந்து தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். இதன் பின்னர்  பலியான தனது மனைவியை பார்த்து கதறி அழுத அவர் சடலத்தை வைத்துக்கொண்டே, அங்கிருக்கும் டாஸ்மாக்கை மூடச் சொல்லி போராட்டம் நடத்தினார். அதாவது ஜம்பு கண்டி பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் குடித்து விட்டு வருபவர்களால் தான் இதுபோன்ற விபத்துகள் நடப்பதாக அந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர். 

இந்நிலையில், ஷோபனாவின் ஸ்கூட்டர் மீது மோதியது அணைகட்டி பகுதியைச் சேர்ந்த பாலாஜி என்பவர் குடிபோதையில் வந்துள்ளதாக தெரிகிறது. போதையில் தான் இந்த விபத்து நடந்துள்ளதாக டாக்டர் ரமேஷ் கூறியுள்ளார். மேலும் அந்த மதுக்கடையை மூடும் வரை இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை என சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக அந்த பகுதி மக்களை திரட்டி போராடினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோவை வடக்கு தாசில்தார், துடியலூர் இன்ஸ்பெக்டர் பால முரளி ஆகியோர் ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த டாஸ்மாக்கை அகற்ற தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி இதன் பிறகு அந்த டாக்டர் போராட்டத்தை கைவிட்டுவிட்டு, தனது மனைவியின் சடலத்தை எடுத்துக்கொண்டு சென்றார்.