மத்தியப் பிரதேச மாநிலம் ஹோசங்காபாத்தை சேர்ந்த டாக்டர் சுனில் மந்திரி. இவருக்குத் தனது கார் ஓட்டுநரான பீரேந்திராவின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. தனது வீட்டில் வெளியில் இருக்கும் அவுட் ஹவுசில் தங்க வைத்திருக்கிறார். கணவரை வெளியில் அனுப்பிவிட்டு அவரது மனைவியுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்போது திடீரென்று வந்த கணவர் டாக்டரையும் தனது மனைவியையும் கடுமையாக கண்டித்திருக்கிறார். மேலும் தனது மனைவியுடனான தொடர்பை விட்டு விடுமாறு  கெஞ்சி இருக்கிறார்.

தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவன் தன்னை இப்படி எச்சரிப்பதா? என ரீதியில் தனது தவறை உணராத டாக்டர் ஓட்டுநர் பீரேந்திரா மீது, ஆத்திரம் கொண்டார். இவனை உயிரோடு விட்டால் இந்த விவகாரம் வெளியே கசிந்து தனக்கு அவமானமாகி விடும் என்றும் நினைத்த அந்த டாக்டர்,கார் டிரைவரை கொல்ல சதி திட்டம் தீட்டினார். 

இதனை தொடர்ந்து தனக்கும், கார் டிரைவர்  மனைவிக்கும்  தவறான உறவு இல்லை எனக் கூறிய டாக்டர் ஒருநாள் முழுவதும் உடனிருந்து கண்காணிக்குமாறு அவரிடம் கூறினார். இதனை நிஜமென்று நம்பிய அப்பாவி கார் டிரைவர் டாக்டரின் வீட்டுக்குச் சென்றார். சிறிது நேரத்தில் டாக்டரிடம் கார் டிரைவர் பீரேந்திரா பல் வலிப்பதாகத் தெரிவித்துள்ளார். 

அப்போது வீரியமான மயக்க மருந்தை அவருக்கு ஊசியில் செலுத்தியுள்ளார் டாக்டர் சுனில்மந்திரி. பின்னர் அவர் மயங்கி சுயநினைவை இழந்த பிறகு கார் டிரைவர் பீரேந்திராவைத் துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை ஆசிட்டில் கரைத்துள்ளார். 

இரண்டு நாட்களாக டாக்டர் சுனில் மந்திரியின் நடவடிக்கையில் மாற்றமுள்ளதை அறிந்த அக்கம் பக்கத்தார் காவல்துறையினரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் சென்று மருத்துவரிடம் விசாரணை நடத்தி போது அங்கிருந்து ஆசிட்டில் கிடந்த உடல் பாகங்களையும், இரத்தம் தோய்ந்த மருத்துவரின் சட்டையையும் கண்டெடுத்துள்ளனர். பின்னர் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கார் டிரைவர் பீரேந்திராவைத் துண்டு துண்டாக வெட்டிக் கொன்று, அமிலத்தில் கரைத்ததை டாக்டர் ஒப்புக்கொண்டாதால் போலீசார்  அவரை கைது செய்துள்ளனர்.