சென்னையில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் மனைவியிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலியை, பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் தில்லை கங்கா நகர் பகுதியில், ஆர்.எஸ்.பாரதி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் சம்பூர்ணம் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர், அவரது கழுத்திலிருந்த தாலி சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர்.

உடனே சுதாரித்த அவர் தங்க சங்கிலியை பறிக்கவிடாமல் சத்தம் போட்டுள்ளார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால், நகையை பறிக்காமல் கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.