Asianet News TamilAsianet News Tamil

திமுக முக்கிய பிரமுகர் சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. ஒரு மாதத்தில் 4வது ஆளுங்கட்சி பிரமுகர் கொலையால் பீதி.!

காஞ்சிபுரத்தில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக பிரமுகர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

DMK leader killed in Kanchipuram... Police Arrest
Author
Kanchipuram, First Published Feb 26, 2022, 9:38 AM IST

காஞ்சிபுரத்தில் அரசியல் ரீதியாக ஏற்பட்ட முன்விரோதத்தால் திமுக பிரமுகர் பட்டப்பகலில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

காஞ்சிபுரம் மாவட்டம் கோனேரிக்குப்பத்தை சேர்ந்தவர் சேகர் (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். திமுக மாவட்ட பிரதிநிதி. இவரது மனைவி சைலஜா (45), கோனேரிக்குப்பம் ஊராட்சி தலைவர். இவர்களுக்கு 3 குழந்தைகள். கடந்த சில மாதங்களுக்கு முன், புரட்சி பாரதத்தில் விலகி திமுகவில் இணைந்தார். இதனையடுத்து, அவருக்கு மாவட்ட பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது. 

DMK leader killed in Kanchipuram... Police Arrest

இந்நிலையில், சேகர் விப்பேடு கிராமத்தில் நடந்த உறவினரின் இறுதி சடங்கில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் அருகே வந்துக்கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த 3 பேர் அவரை கழுத்து, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த சேகரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சேகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அரசியல் ரீதியாக ஏற்பட்ட முன்விரோதத்தால் கொலை நடைபெற்றது தெரியவந்தது. 

DMK leader killed in Kanchipuram... Police Arrest

இதுதொடர்பாக போலீசார் கூறுகையில்;- கோனேரிகுப்பம் ஊராட்சி தேர்தலில், அதே பகுதியை சேர்ந்த கவுசல்யா என்பவர், போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவருக்கு, துணை தலைவர் பதவியை சேகரிடம் கேட்டுள்ளனர் .அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, ஊராட்சி மன்ற கட்டிடமும், அங்குள்ள தொலைக்காட்சி அறையும் இடிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்குள் மோதலை அடுத்து கவுசல்யாவின் தம்பி இளவரசன் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததது தெரியவந்தது. இதனையடுத்து, 3 பேரை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 4 பேர் கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios