ஆசிர்வாதம் வாங்கச் சென்ற இரண்டு பெண்களை சீடர்கள் சீரழித்து புகார் செய்ய போன பூசாரியும் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா பதற்றத்திலும் பதற வைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. பலாத்காரங்களும், பகீர் சம்பவங்களும் நடந்தேறி நாட்டை சீரழித்து வருகின்றன. அமிர்தசரஸ் நகரில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராம் தீரத் கோயிலில் 2 பெண்களை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

பட்டியல் இனத்தின் பஞ்சாப் ஆணைய உறுப்பினர் தர்செம் சிங் சியால்கா, கொடுத்த புகாரின் பேரில், ராம் தீரத் கோயிலில் சோதனை நடத்திய போலீசார் அடைத்து வைத்திருந்த இரண்டு பெண்களையும் அதிரடியாக உள்ளே புகுந்து மீட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ''பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களில் ஒருவரான 25 வயது பெண் பூசாரிகளிடம் ஆசிர்வாதம் வாங்குவதற்காக ஆசிரமத்துக்கு வந்துள்ளார். அங்கு இருந்த சூரஜ் நாத், நச்சதர் நாத் ஆகிய சீடர்கள் இவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து தலைமை பூசாரி கிர்தாரி நாத் மற்றும் வருந்தர் நாத் ஆகியோரிடம் புகாரளிக்க சென்றுள்ளனர்.

ஆனால், புகாரின் பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக இருவரையும் அடைத்து வைத்து அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அவர்களின் செல்போன்களையும் பிடுங்கி வைத்துக்கொண்டு  கொடுமை செய்துள்ளனர். இதில் ஒருவர் அங்கிருந்த போன் ஒன்றை திருடி தனது அண்ணனுக்கு தகவல் தெரிவிக்க தற்போது போலீசார் தலைமை பூசாரி மற்றும் சீடர்கள் ஆகியோர் மீது 376, 379, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.