திரைத்துறை மற்றும் பல்வேறு தொழில்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் பணியர்ற்றும் பெண்கள், தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான விஷயங்களை, மீ டூ என்ற, ஹேஸ்டேக் வாயிலாக, வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, இந்த விஷயம் குறித்து விசாரிக்க, மத்திய அரசு குழு அமைத்துள்ளது. தமிழ் திரையுலகிலும், மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 'விளம்பரத்திற்காகவும், பணம் பறிக்கவும், மீ டூவை பயன்படுத்த வேண்டாம்' என, நடிகையர், காஜல்அகர்வால், சமந்தா உள்ளிட்ட பலர் கூறியுள்ளனர். இந்நிலையில், பெண்களால் பாதித்த ஆண்கள், தங்களின் குறைகளை கூற, 'வி டூ மென்' என்ற, ஹேஸ்டேக்கை, இயக்குனர் வாராகி துவக்கியுள்ளார். இதுகுறித்து,  செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர்  வாராகி, 'நடிக்க வேண்டுமானால், படுக்கையை பகிர வேண்டும்' என, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டை முன் வைத்து, தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தமிழகம் வந்துள்ளார். அவருக்கு, ஆரம்பத்திலேயே கண்டனம் தெரிவித்தோம். அவரை தொடர்ந்து பலரும், தவறான நோக்கத்தில், பிரபலமானவர்கள் மீது புகார்கள் கூறிவருகின்றனர் என குறிப்பிட்டார்.

 

இதிலிருந்து, அப்பாவி ஆண்களை பாதுகாக்கவே, 'வி டூ மென்' துவக்கியுள்ளோம். இதில், 500க்கும் மேற்பட்ட பிரபலமான நடிகர்கள், தொழிலதிபர்கள் பலர், தங்களுக்கு நேர்ந்த மிரட்டல்களை கூறி வருகின்றனர்.

ஐந்தாண்டுகளுக்கு முன், தொழிலதிபர் ஒருவர், நடிகை ஒருவரது சம்மதத்துடன், படுக்கையைப் பரிந்து கொண்டார்.  தற்போது, அந்த அந்தரங்க விஷயங்களை வெளியிட போகிறேன் என மிரட்டியுள்ள அவர்,  மூன்று கோடி ரூபாய் கொடுத்தால் விட்டு விடுகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

இதே போல, ஒரு நடிகரும், நடிகையின் மிரட்டலுக்கு ஆடிப்போயுள்ளார். அப்பாவி ஆண்களுக்கு பாதுகாப்பு தருவது நம் கடமை. என வாராகி தெரிவித்துள்ளார்.