கணவனால் கொலை செய்யப்பட்டு கண்டந்துண்டமாக வெட்டி வீசப்பட்ட சந்தியாவுக்கு பல அரசியல்வாதிகளிடம் தொடர்பு இருந்து வந்ததாக பாலகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சந்தியா கொலை வழக்கில் அவரது கணவர் பாலகிருஷ்ணனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார் பாலகிருஷ்ணன். சந்தியா குழந்தைகளுடன் தூத்துக்குடி டூவிபுரத்தில் வசித்து வந்தார். சந்தியாவுக்கு மாயவரதன் என்ற மகனும், யோகமுத்ரா என்ற மகளும் உள்ளனர். பாலகிருஷ்ணன் மட்டும் சென்னையில் வசித்து வந்தார். அவர் அடிக்கடி தூத்துக்குடி வந்து மனைவி மற்றும் பிள்ளைகளை பார்த்து வந்தார்.

சந்தியா அனைவரிடமும் சகஜமாக பேசக்கூடியவர். பாலகிருஷ்ணன் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முக்கிய கட்சியின் தூத்துக்குடி நகர செயலாளராக பொறுப்பு வகித்தார். அந்த வகையில் சந்தியாவுக்கும் அரசியல் தொடர்புகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் கடந்த பாலகிருஷ்ணன் அரசியலை விட்டு சினிமாவுக்கு வந்த பிறகும் சந்தியாவுக்கு அரசியல் தொடர்புகள் தொடர்ந்தன. கடந்த 2011 உள்ளாட்சித் தேர்தலில் தூத்துக்குடி நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சந்தியா சுயேட்சையாக போட்டியிட்டார். அதிலிருந்து அவரது நடவடிக்கைகளில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

அப்போது தனக்கு வாக்களித்தால் எப்போது வேண்டுமானலும் தன்னை சந்திக்கலாம் எனக்கூறி தனது செல்போன் நம்பர் அடங்கிய விசிட்டிங் கார்டுகளை பல இளைஞர்களிடம் கொடுத்துள்ளார். அதன் மூலம் அப்போதே பல இளைஞர்களிடம் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளார் சந்தியா. தேர்தலில் தோற்றாலும் அந்த இளைஞர்களுடனான நட்பும், உல்லாசமும் தொடர்ந்துள்ளது. அந்த இளைஞர்கள் பலரும் பாலகிருஷ்ணன் இல்லாதபோது வீட்டிற்கே வந்து சந்தியாவுடன் நெருங்கி பழகி சென்றுள்ளனர்.

 

இதனை அறிந்து மனம் நொந்த பாலகிருஷ்ணன், சந்தியாவை பார்க்க வீட்டிற்கு வரும் நபர்களை அறிய வீட்டிற்கு முன் கண்காணிப்பு கேமராவை பொருத்தி உளவு பார்த்துள்ளார். அந்த கண்காணிப்பு கேமராவை அகற்றக்கோரி வீட்டு வாசல் முன் தான் உடுத்தி இருந்த ஆடைகளை அவிழ்த்து போராட்டம் நடத்தியுள்ளார் சந்தியா. தூத்துக்குடி பகுதியை சேர்ந்த பல அரசியல்வாதிகளுடன் சந்தியா தகாத உறவில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. சினிமா எடுக்க பாலகிருஷ்ணன் சென்னை வந்த பிறகு பல கட்சியை சேர்ந்த அரசியல்வாதிகளுடனும் நட்பை விரிவாக்கி கொண்டுள்ள விவரங்களை தனது வாக்குமூலத்தில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.