Asianet News TamilAsianet News Tamil

இளைஞர் தலை துண்டித்து கொடூர கொலை.. சம்பவத்தின் பின்னணியில் திமுக பிரமுகர்..!

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(35). இவரை கடந்த 22ம் தேதி ஒரு கும்பல் மட்டப்பாறை பகுதியில் வைத்து கொடூரமாக கொலை செய்து தலையை தனியாக வீசி சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

dindigul youth murder...DMK leader in the background
Author
Dindigul, First Published Sep 26, 2021, 4:53 PM IST

திண்டுக்கலில் இளைஞர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக கிளை செயலாளர் இன்பராஜுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. 

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள அனுமந்தராயன் கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டீபன்(35). இவரை கடந்த 22ம் தேதி ஒரு கும்பல் மட்டப்பாறை பகுதியில் வைத்து கொடூரமாக கொலை செய்து தலையை தனியாக வீசி சென்றது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 

dindigul youth murder...DMK leader in the background

இந்த கொலை தொடர்பாக சாமியார்பட்டி மன்மதன், மணிகண்டராஜன், ராம்குமார், சங்கரபாண்டி மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதில், போலீசாரிடம் தப்பிக்க முயன்ற போது மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்ததில் மன்மதனின் கால்முறிவு ஏற்பட்டது.  திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன்மதன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், கைது செய்யப்பட்ட கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டதாக அண்மையில் கைது செய்யப்பட்ட திமுக பிரமுகர் இன்பராஜ் என்பவரை போலீசில் காட்டிக் கொடுத்ததற்காக ஸ்டீபன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆரம்பத்தில் இன்பராஜின் கூட்டாளியாக செயல்பட்டு வந்த ஸ்டீபன. போலி மது விற்பனையில் முறைகேடு செய்ததால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் ஸ்டீபனை வெளியேற்றிவிட்டு இன்பராஜ் தனது ஆதரவாளர்களான மன்மதன், சக்திவேல் உள்ளிட்டோரை வைத்து போலி மது தயாரிப்பை ரகசியமாக நடத்தி வந்துள்ளார்.

dindigul youth murder...DMK leader in the background

கடந்த 22 ம் தேதி காலையில், போலீசார் இன்பராஜுக்கு சொந்தமான தோட்டத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 11,0000 போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, இன்பராஜ் உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஸ்டீபன் தான் போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுத்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து,  ஸ்டீபனை மது அருந்த அழைத்துச் சென்று  இன்பராஜின் ஆதரவாளர்கள் தலை துண்டித்து நடுரோட்டில் வீசி விட்டு சென்றதாக கூறியுள்ளனர். தலைமறைவாக உள்ள இன்பராஜை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios