தற்காப்புக்காக பெண்கள் கொலை கூட செய்யலாம் அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது என பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவின் கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார் .  பெண்களின்   பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ள காவலன் செல்போன் செயலி விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது . அதில்  பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்புப் பிரிவு  கூடுதல் டிஜிபி ரவி,  உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய டிஜிபி ரவி,  காவலன் செயலியின் பயன்பாட்டை இன்னும் எளிதாக்க  ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட  இருப்பதாக கூறினார் .  அதேபோல் மாற்றம்  காவல்துறையிலும் இருக்கும் என்றார் .  குறிப்பாக சிறார்களின் ஆபாசப்படங்களை பதிவிறக்கம் செய்வோர் , மற்றும் பகிர்வோர் மீதான நடவடிக்கைகள்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.  இந்நிலையில்  இரண்டு கல்லூரி மாணவிகள் நேரில் வந்து தாங்கள் ஆபாச படங்களை பார்த்தமைக்காக  தன்னிடம் மன்னிப்பு கோட்டதாக அவர் கூறினார். இந்நிலையில்  ஹைதராபாத் சம்பவத்தை சுட்டிக் காட்டிப் பேசுய அவர், இனி பெண்களுக்கு எதிரான குற்றங்களை பார்த்துக்கொண்டு காவல்துறை சும்மா இருக்காது என்றார் .  

பெண்கள்  யானையின் பலத்திற்கு ஒப்பானவர்கள்,   யாராவது சீண்டினால் அடி,  உதை,  குத்து ,  தற்காப்புக்காக கொலை கூட செய்யுங்கள்.  அதற்கு சட்டத்தில் இடம் உள்ளது என்றார், அவர் அப்படி கூறியதைக் கேட்ட  மாணவிகளின் கைத்தட்டல் மற்றும்  விசிலால்  அரங்கம்  அதிர்ந்தது . தொடர்ந்து பேசிய அவர் மாணவர்களாகிய நீங்கள் முதலில் தைரியமாக இருங்கள் உங்கள் அண்ணனாக நான் இருக்கிறேன் உங்கள் அண்ணன் ஒரு காவல்துறை அதிகாரி என நினைத்துக்கொள்ளுங்கள் என அவர் பேசியது மாணவிகள் மத்தியில் நெக்ழ்ச்சியை ஏற்படுத்தியது .