கொரோனா பாதிப்புடன் தப்பி ஓடிய டெல்லி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

T.Balamurukan

நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காக புதுச்சேரி வந்த டெல்லியை சேர்ந்த இளைஞர் நிதின்ஷர்மா விழுப்புரத்தில் தங்கியிருந்தார்.  இந்தநிலையில், கொரோனா அறிகுறி இருந்ததால், அங்குள்ள அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பபட்டு, பின்னர் தனிமைப்படுத்தப்பட்டார்.

அத்துடன், அவரிடம் இருந்து ரத்த மாதிரிகள் பெறப்பட்டன. கடந்த 7ம் தேதி மருத்துவமனையில் இருந்து தப்பியோடினர். பின்னர், ஆய்வு முடிவில் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் புதுச்சேரி, விழுப்புரத்தில் தீவிரமாக அந்த இளைஞரை தேடி வந்தனர். இந்த நிலையில், செங்கல்பட்டு அருகே உள்ள படாளம் பகுதியில் போலீசார் அவரை கைது செய்தனர்.இதனையடுத்து அவர் தற்போது மீண்டும் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 5 நாட்களில் அவர் எங்கெங்கு சென்றார் என்பது குறித்த விசாரணை தொடங்கி இருக்கிறது.