லிப்டில் வேலைக்கார பெண்ணை தலைமுடியை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் வீட்டின் உரிமையாளர்.!
டெல்லியின் நொய்டாவில் உயர்மட்ட குடியிருப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரை அந்த வீட்டின் உரிமையாளரான ஷெபாலி கவுல் என்ற பெண் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
டெல்லியில் வீட்டு வேலைக்கு சென்ற சிறுமியை வீட்டின் உரிமையாளர் தலைமுடியை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் நொய்டாவில் உயர்மட்ட குடியிருப்பு ஒன்றில் சிறுமி ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அவரை அந்த வீட்டின் உரிமையாளரான ஷெபாலி கவுல் என்ற பெண் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இரவு பகலும் என்று கூட பாராமல் அவரை வேலை வாங்கி ஷெபாலி, அனிதாவை அடித்தும் துன்புறுத்தியுள்ளார். அனிதா வீட்டிற்கு செல்ல முயற்சிக்கும் போதெல்லாம், அவரை தலைமுடியை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்தும் தாக்கியுள்ளார். பிணைக் கைதியை போல் வைத்திருந்துள்ளார்.
லிப்டில் வைத்து வேலைக்கார பெண்ணை வீட்டு உரிமையாளர் ஷெபாலி கவுல் தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுமியை வீட்டின் உரிமையாளர் தலை முடியை பிடித்தும், கழுத்தை இறுக்கி இழுத்து சென்று அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக ஷெபாலி கவுல் பெண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.