ஓடும் மெட்ரோ ரயிலில் காதலர்கள் இருவர் வாயோடு வாய் வைத்து முத்தம் கொடுக்கும் காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.  டெல்லி மெட்ரோ ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.  தற்போது வெளியாகியுள்ள வீடியோவில்,  மெட்ரோ ரயிலில் இரண்டு காதல் ஜோடிகள் அமர்ந்துள்ளனர்,  பக்கத்தில் ஒருவர் ஹெட்போன் போட்டு அமர்ந்திருக்கிறார்.  மெட்ரோ ரயிலில் கூட்டம் மிக அதிகம் என்று சொல்ல முடியாத அளவிற்கு மிதமாக உள்ளது,  இந்நிலையில் அந்தக் கூட்டத்தை கொஞ்சமும்  பொருட்படுத்தாத அந்த இளைஞர் தன் காதலியியை சேர்ந்து  இருக்கமாக அணைத்து வாயோடு வாய் வைத்து லிப் லாக் கிஸ் அடிக்கிறார்.

ஆனால் அங்கிருப்பவர்கள்  அதைக் கண்டும் காணாததுமாக உள்ளனர்.  அந்த அக்காதல் ஜோடியின் அத்துமீறிய இச்செயலை அங்கிருந்த யாரோ ஒருவர் வீடியோ எடுத்து அதை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அது வேகமாக பரவி வைரலாகி வருகிறது.  இதுகுறித்து சமூகவலைதளத்தில் இக்காதல் ஜோடிகளை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.  ஒரு பொது இடத்தில் இப்படி ஒழுக்கக்கேடாக நடந்து கொள்வது சரிதானா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.  இது சமூகத்தில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதுகூட தெரியாதா..?  மற்றவர்கள் தங்களை பற்றி என்ன நினைப்பார்க்ள என்று கொஞ்சம்கூட கூச்சப் படாமல் நடந்துகொள்ளும் இவர்கள் மனித இனத்தில் சேர்ந்தவர்கள் அல்ல  என்றும்  கடுமையாக விமர்சித்து  வருகின்றனர்.

இந்த வீடியோவை, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்  மற்றும் டெல்லி காவல்துறை கமிஸ்னருக்கு நெட்டீசன்கள் டேக் செய்து வருகின்றனர். அத்துடன் இதுபோன்ற செயலை மெட்ரோவில் அனுமதிக்கலாமா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலநேரங்களில் காதலர்கள் பொது இடங்களில் அத்துமீறி நடந்து கொள்வதும் தன் சுற்றத்தில் யார் இருக்கிறார்கள் இல்லை என்பதைப் பார்க்காமல் சில்மிஷத்தில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி வருகிறது அப்படி பல நிகழ்வுகள்  porn வீடியோவாக சமூக வலைதளத்தில் இலட்சக்கணக்கில் வெளிவரும் நிலையில்,  காதல் ஜோடியின் லிப்லாக் வீடியோவும் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது.