டெல்லியில் நண்பனின் மனைவி மீது ஏற்பட்ட தீராத மோகத்தால் நண்பனை கொடூரமாக கொன்று ரயில்வே தண்டவாளத்தில் வீசிய நபரை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

டெல்லி ஜாகிரா அருகே ரயில்வே தண்டவாளம் அருகே ஒருவர் அடிப்பட்டு இருந்து கிடப்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிதைந்த நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.  

அப்போது. தண்டவாளத்தில் இறந்து கிடப்பதாக தகவல் கொடுத்த குல்கேஷ் என்பவரை போலீசார் விசாரித்தனர். ஆனால், அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளார். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் தெரிவித்தார்.

  

போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் கொலை செய்யப்பட்ட தல்பீரின் மனைவிக்கும், குல்கேசுக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது. அந்தப் பெண்ணை நண்பரிடம் இருந்து பிரித்து திருமணம் செய்துகொள்ள ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அந்தப் பெண் அவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த குல்கேஷ் நண்பர் தல்பீரை கொலை செய்துவிட்டு அவரது மனைவியை திருமணம் செய்துகொள்ள சதித் திட்டம் தீட்டியுள்ளார்.

 

அதன்படி தல்பீரை தனியாக பேசுவது அழைத்து சென்று கொடூரமாக இரும்பு கம்பியால் தாக்கி தண்டவாளத்தில் வீசி சென்றதாக கூறியுள்ளார். இந்த கொலையில் அவரது மனைவிக்கு தொடர்பு உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.